கொரான் இவானிசெவிச்
கொரான் இவானிசெவிச் (Goran Ivanišević) [1] குரோவாசிய டென்னிசு வீரர் ஆவார். தனது முதலாவது கிரான்ட்சிலாம் பட்டத்தை 2001இல் விம்பிள்டனில் கைப்பற்றினார். 2001 ஆம் ஆண்டிற்கு முன் 125 ஆவது தரநிலையில் இருந்த இவர் அந்த ஆண்டிற்குப் பிறகு 16 ஆவது இடத்திற்கு முன்னேறினார்.[2]
ஆரம்ப நாட்கள்
[தொகு]முன்னாள் யூகோஸ்லோவியாவின் ஸ்பிளிற் என்ற இடத்தில் 13 செப்டெம்பர் 1971இல் இவர் பிறந்தார். சிறுவயதில் பல விளையாட்டு்க்களில் இவருக்கு ஆர்வம் இருந்திருந்தாலும் , “இளையவர்” மட்டத்தில் உலக தரத்தில் டென்னிஸ் விளையாடுவதை இவர் விரும்பினார். இவருக்கு 17வயதாக இருக்கும்போது 1988இல் இளைய வீரர்கள் தரப்படுத்தலில் மூன்றாம் நிலையை எட்டியிருந்தாலும் செருமனியின் பிராங்பேர்ட் நகரில் ஜேர்மனியரான றுட்றிகர் ஹாஸ் என்பவருடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
90களில் இவர் இரண்டு (1994, 1998) விம்பிள்டன் இறுதி போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் இரண்டு போட்டிகளிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சம்பிராஸ் வெற்றி பெற்றார். மேலும் இவர் யூ.எசு. ஓப்பன் அரையிறுதிப் போட்டி வரை சென்றார். பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆகிய போட்டிகளில் ஆரு முறை காலிறுதிச் சுற்று வரை தேர்வானார்.
2001இல் தோள்பட்டைக் காயம் காரணமாக இவரால் விளையாட முடியவில்லை. உலக தரப்படுத்தலில் 125வது இடத்திற்கு கீழிறக்கப்பட்டார். தனது 29வது வயதில் பற் றாஃப்ரர் என்ற அவுஸ்திரேலிய வீரரை வீழ்த்தி வாகையாளர் ஆனார்.2002 ஆம் ஆண்டில் தனது ஓய்வினை அறிவித்தார். 2001ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் திகதியன்று இவரது பிறந்த இடமான ஸ்பிளிற்றுக்கு வந்தபோது, 150,000க்கு மேற்பட்ட ரசிகர்கள் இவருக்கு வரவேற்பு அளித்துள்ளது துறைமுகத்தில் வரவேற்கப்பட்ட இவர் படகுகள் பவனியில் கலந்து கொண்டார். வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2001இன் பிற்பகுதியில் பீபீசி செய்தி நிறுவனம், அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகத் தெரிவு செய்து கௌரவித்தது.தற்போது மார்டடின் சிலிச் என்ற இளம் வீரருக்கு பயிற்சியாளராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ivaníšević". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
Ivaníšević
- ↑ "Goran Ivanišević – Rankings History". ATP World Tour.