கொரந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Phyllanthaceae
சிற்றினம்: Antidesmeae
பேரினம்: Antidesma
இனம்: A. bunius
இருசொற் பெயரீடு
Antidesma bunius
(L.) Spreng.

கொரந்தி (Wild Cherry; Antidesma bunius) என்பது பிலந்தேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பழ மரம் ஆகும். இதுதென்கிழக்காசியா மற்றும் வடக்கு ஆத்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது. இத்தாவரம் குட்டையான புதர் வகை முதல் உயரமாக வளரக்கூடிய தாவரம் வரை வேறுபட்ட தோற்றங்களைக் கொண்டது. இது சுமார் 30 மீட்டர் உயரம் வரைக் காணப்படும்.இதன் இலை முட்டை வடிவில் தோல்போன்ற 20 சதம மீட்டர் நீளம் மற்றும் ஏழு சதம மீட்டர் அகலத்தில் காணப்படும். இவை சிறிய இலைக்காம்பினால் கிளையில் இணைந்திருக்கும்.

இவ்வினம் ஈரில்லத்தாவரமாக, அதாவது ஆண், பெண் பூக்கள் வெவ்வேறு மரங்களில் காணப்படும். வலிமையான, விருப்பூட்டாத வாசனை கொண்டு காணப்படும். பூக்கள் கிளை கொண்ட பூக்காம்புகளில் அடுக்கப்பட்டிருக்கும் பூந்துணராகக் காணப்படும். பழங்கள் கோள வடிவினதாக கொன்னைகளாகக் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரந்தி&oldid=3533117" இருந்து மீள்விக்கப்பட்டது