கொம்மலினா என்சிஃபோலியா

கொம்மிலினா என்சிசிபோலியா (Commelina ensifolia) சாதாரண பெயரில் ஸ்கர்வி களை மற்றும் ஸ்கர்வி புல் அல்லது வாண்டரிங் ஜீ என்று அழைக்கப்படுகிறது.[1][2] இது ஓராண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகம் ஆத்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.[3]
இந்தச் சிற்றினமானது சிறிய செடியாகவும் தண்டில் உள்ள கணுவிலிருந்து வேர் வளர்ச்சியடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் உள்ளது. பூவானது பிரகாசமான நீல நிறம் உடையதாகவும் மூன்று இதழ்கள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால் ஒரு இதழ் மட்டும் சிறியதாக உள்ளதால் பார்ப்பதற்கு ஈரிதழ் மலர் போல் தெரியும். இந்தத் தாவரம் ஈரமான மண்ணில் வளரும். ஆனால் மாறுபட்ட சீதோசன நிலைகளாகி கடற்கரையோர சீதோற்மை முதல் மத்திய வறன்ட பாலைவனப் பகுதிகளில் அதாவது ஒரே ஒரு நாள் பெய்யக்கூடிய பகுதகளிலும் வளரும்.[1][2][4] இந்த தாவரமானது பச்சைக் காய்கறியாக பழங்குடி ஆஸ்திரேலியர்கள் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐரோப்பிய குடியேறிகளும் இந்தர் தாவரத்தை ஸ்கர்வி வராமல் தடுக்க பயன்படுத்துவதால் ஸ்கர்வி புல் என்று அழைக்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 F.A.Zich; B.P.M.Hyland; T.Whiffen; R.A.Kerrigan (2020). "Commelina ensifolia". Australian Tropical Rainforest Plants Edition 8 (RFK8). Centre for Australian National Biodiversity Research (CANBR), Australian Government. Retrieved 20 June 2021.
- ↑ 2.0 2.1 "Commelina ensifolia". Atlas of Living Australia. Retrieved 21 August 2014.
- ↑ Kew World Checklist of Selected Plant Families
- ↑ John Jessop; Australian Systematic Botany Society (1981). Flora of Central Australia. Reed. ISBN 9780589502669.
- ↑ A. B. Cribb; Joan Winifred Cribb; Charles McCubbin (1987). Wild Food in Australia. Fontana/Collins. ISBN 978-0-00-636571-6.