கொமோடோ தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொமோடோ தேசிய பூங்கா
கொமோடோ தேசிய பூங்காவிலுள்ள கொமோடோ டிராகன்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Flores Locator Topography.png" does not exist.
அமைவிடம்சுந்தா சிறிய தீவுகள் இந்தோனேசியா
பரப்பளவு1,733 km2 (669 sq mi)
நிறுவப்பட்டது1980
வருகையாளர்கள்45,000 (in 2010)
நிருவாக அமைப்புவனத்துறை அமைச்சகம்
வகைஇயற்கை
வரன்முறைvii, x
தெரியப்பட்டது1991 (15th session)
உசாவு எண்609
State Partyஇந்தோனேசியா
Regionஆசிய-பசிபிக்

கொமோடோ தேசிய பூங்கா  இந்தோனேசியாவின் சுந்தா சிறு தீவுகளில்  அமைந்துள்ள தேசிய பூங்கா ஆகும்.  இது கிழக்கு நுசா தந்கரா மாகாணமும் மேற்கு  நுசா  தந்கரா  மாகாணமும்  இதன்  எல்லையில்  உள்ளன.  கொமோடோ,  படார்,  ரின்கா  ஆகிய  பெரிய  தீவுகளும்  மேலும் 26 சிறு தீவுகளும்  இப்பூங்காவில்  அடங்கியுள்ளன. இதன் மொத்த  பரப்பு 1,733  சதுர  கிமீ  ஆகும்.  இதில் 603  சதுர கிமீ நிலமாகும். கொமோடோ  டிராகன்களை  பாதுகாக்க  இப்பூங்கா  1980ஆம்  ஆண்டு  உருவாக்கப்பட்டது. [1] [2] பின்னர் இது கடல்  உயிரினங்கள்  உட்பட  மற்ற  உயிரினங்களை  பாதுகாக்க  தொடங்கியது. 1991ஆம் ஆண்டு  இப்பூங்கா யுனெசுக்கோ உலக பாரம்பரிய தளம்.ஆக அறிவிக்கப்பட்டது[3]

கொமோடோ தீவை சுற்றியுள்ள கடல் பரப்பு நிறைய  கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. கொமோடோ தீவுகள் பவள முக்கோணம்  பகுதியில்  அமைந்திருக்கிறது. இப்பகுதியில்  நிறைய  பல்லுயிர்கள்  வாழ்கின்றன.

வரலாறு[தொகு]

கொமோடோ தேசிய பூங்கா 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டது.  பூங்கா முதலில்  கொமோடோ டிராகனை பாதுகாக்க உருவாக்கப்பட்டாலும் பின்பு நிலத்திலும்  நீரிலுமுள்ள பல்லுயிர்களை பாதுகாக்க முனைந்தது.கொமோடோ டிராகன் 1912ஆம் ஆண்டு ஒல்லாந்தர் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவர்  கண்டு பிடித்தார். 

இத்தீவை சேர்ந்தவர்கள் மீனவர்கள். இத்தீவில் இருப்பவர்களை பற்றி சிறிதே வெளியில் தெரிகிறது. இத்தீவு  பிமா சூல்தானுக்கு  உட்பட்டது என்றும் இத்தீவை யாரும்  பொருட்படுத்தாததால் இதில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் எந்த ஆபத்தும் நேரவில்லை.

புவியியலும் காலநிலையும்[தொகு]

கரடுரடான வறண்ட கொமோடோ தீவு சில மரங்களுடன் உள்ளது.
ரின்கா தீவு

இப்பூங்கா மேற்கு புலோரெசு  தீவைச்சேர்ந்த மூன்று பெரிய தீவுகளான கொமோடோ, படார் , ரின்கா மற்றும் 26 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. இப்பூங்காவை சுற்றியுள்ள கடல் சேப் நீரிணினையை சேர்ந்தது. தேசிய பூங்கா உள்ள தீவானது எரிமலைக் குழம்புகளால்  ஆன  வகையைச் சேர்ந்தது. தீவின் நிலப்பகுதி  கரடுமுரடாணது மலைகளால் சூழப்பட்டது, நிலப்பரப்பு கடல்  மட்டத்திலிருந்து   735  மீட்டர்  உயரம்  வரை  இருக்கும்.  இந்தோனேசியாவிலேயே வறண்ட  காலநிலையை  உடையது.  ஆண்டு  சராசரி  மழை  அளவு 800 மிமீ  முதல் 1000  மிமீ  வரை  இருக்கும்.  வறண்ட காலநிலையுள்ள மே முதல் அக்டோபர்  வரை வெப்பம்  40 ° செ  அளவுக்கு இருக்கும்.

தாவரங்களும் விலங்கினங்களும்[தொகு]

வறண்ட வெப்ப காலநிலை புல்வெளி உருவாவதற்கு சிறந்தது. இதனால் இப்பகுதி  கொமோடோ  டிராகன் வாழ ஏற்ற இடமாக உள்ளது. கொமோடோ டிராகன்  கொமோடோ,  ரின்கா,  கிலி மோடாங்  போன்ற  சில  தீவுகளில்  உள்ளன  இவை  படார் தீவில்  அழிந்துவிட்டன.

முகில்  காடுகள் எனப்படுபவை ஈரப்பதம் நிறைந்த பசுமைமாறா காடுகள் இவை கடல் மட்டத்திலிலந்து  500 மீட்டருக்கும் மேலே இருக்கும்.  பல்வேறு  வ்கையான  அரிய  வகை  தாவரங்கள்  இங்குள்ளன.  கடற்கரை  ஓரங்களில் அலையாத்திக் காடுகள் உள்ளன.

கொமோடோ தீவின் வடகிழக்கு கரையோரத்தில் ஏராளமான பவளப் பாறைகள் உள்ளன, பவளப் பாறை வளர்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக இப்பகுதி உள்ளது. இப்பூங்கா திமிங்கலச் சுறா, மான்டா திருக்கை, கழுகு திருக்கை, கடற்குதிரை,  பஞ்சுயிரிபெருங்கடல் சூரியமீன், பவளம்நீல வளையமுள்ள எண்காலி முதலிய நிறைய கடல் உயரினங்கள் வாழும் இடமாகவும் உள்ளது. 

அருகிலுள்ள கடல் நீரில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.  ஓங்கில்,  விந்து திமிங்கிலம் [4] நீலத் திமிங்கிலம்[5][6]  மேலும் பல அரிய வகைத் திமிங்கிலங்கள் இங்கு வாழ்கின்றன. அழியும் தருவாயில் உள்ள ஆவுளியா கொமோடோ பகுதியில் வாழ்கிறது. கடல் வாழ் உயிரினங்களை ஒப்பிடும் போது நில வாழ் உயிரினங்கள் அதிக மாறுபட்ட உயிரினங்களை கொண்டிருக்க வில்லை. நில வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆனால் இப்பகுதி நில வாழ் உயிரினங்கள்  இப்பகுதிக்கே உரியவை அதனால் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பல விலங்குகள் ஆசிய கண்டத்தை சார்ந்தவை, காட்டாக டிமோர் மான், காட்டுப் பன்றி, எருமை, நண்டு தின்னும் குரங்கு, புனுகு பூனை போன்றவை. பல ஊர்வனங்களும் பறவைகளும் ஆத்திரேலிய கண்டத்தை சார்ந்தவை.  காட்டாக ஆரஞ்சு நிற பாத பறவை,  மஞ்சள் நிற கொண்டை குக்கட்டோ போன்றவை.

இப்பூங்காவிலுள்ள அனைவரும் அறிந்த புகழ் பெற்ற ஊர்வன உயிரினம் கொமோடோ டிராகன் ஆகும்.இது 3 மீட்டர் நீளத்துக்கு மேல் வளரும் 70 கிலோவுக்கு மேல் எடையுடன் இருக்கும்.[7]

பன்னிரண்டு வகை நில பாம்பு இனங்கள் தீவில் காணப்படுகின்றன.  சாவானிய உமிழ் நாகம்,  கண்ணாடி விரியன்,  வெண்குழி விரியன்,  நீல குழி விரியன்,  டிமோர் மலைப்பாம்பு  ஆகியன  சில   காட்டுகள்.  மரப்பல்லி,  கொமோடோ டிராகன்,  மூட்டற்ற  பல்லி  போன்ற  ஊர்வனங்களும் இங்கு உள்ளன. உவர்நீர் முதலை ஆசிய மாட்டுத்தவளை, கொமோடோ தவளை போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளன. 

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Forestry: Komodo NP பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம், retrieved 2 February 2010
  2. UNESCO: Advisory Body Evaluation, retrieved 2 February 2010
  3. "Komodo National Park". UNESCO.
  4. "Cetacean Surveys in Komodo National Park" (PDF). Indonesia Program Information Sheet CMP 8 (The Nature Conservancy). http://www.apex-environmental.com/pdf/InfoSheetKNPCetaceans.pdf. பார்த்த நாள்: 2015-01-22. 
  5. "The Deep South of Komodo". The Seven Seas Liveaboard. பார்க்கப்பட்ட நாள் 2015-01-22.
  6. Tanzil N. (2010). "Blue Whales in Komodo National Park!". பார்க்கப்பட்ட நாள் 2015-01-22. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-17. பார்க்கப்பட்ட நாள் 2017-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமோடோ_தேசியப்_பூங்கா&oldid=3551760" இலிருந்து மீள்விக்கப்பட்டது