கொமுட்டர் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலதுபுறமாக:
  • நியூ ஜெர்சி - நியூயார்க் நகர கொமுட்டர் தொடருந்து;
  • கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் Class 83 EMU ரக கொமுட்டர் தொடருந்து;
  • அமெரிக்கா கொலராடோ கொமுட்டர் தொடருந்து;
  • செக் குடியரசு பிரேக் நகரில் கொமுட்டர் தொடருந்து;
  • நியூசிலாந்து நட்டில் அக்லாந்து கொமுட்டர் தொடருந்து;
  • கலிபோர்னியா சாந்தியாகோ கொமுட்டர் தொடருந்து

கொமுட்டர் தொடருந்து (ஆங்கிலம்: Commuter Rail மலாய்: Kereta api Komuter); என்பது ஒரு பெருநகரப் பகுதி; அல்லது புறநகர்ப் பகுதிக்குள் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகளைக் குறிப்பதாகும். இந்தச் சேவை தொடக்கப்படும் போது பெருநகரப் பகுதிகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டது.[1]

நவீன பெருநகர் மேம்பாட்டுத் திட்டங்கள்; மற்றும் வீடுமனைக் கட்டுமானங்கள் அதிகரிப்பு; மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றினால், கொமுட்டர் தொடருந்துகளின் சேவை புறநகர்ப் பகுதிகளிலும் விரிவு அடைந்தன. பின்னர் காலத்தில் அந்தச் சேவை தொலைதூர நகரங்கள் வரை பரவிச் சென்றன.[2]

பொது[தொகு]

மின்மயமாக்கல் அல்லது டீசல் எரிவாயு மூலமாக கொமுட்டர் தொடருந்துகள் இயங்குகின்றன. சில வேளைகளில் கனரக தொடருந்துகளாகவும் இயங்குகின்றன. அண்மைய காலங்களில் இந்தக் கொமுட்டர் தொடருந்து சேவை; போக்குவரத்து நெரிசல்கள்; எரிபொருள் பாதிப்புகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய பொது விழிப்புணர்வுகளினால் பிரபலமாகியுள்ளது.[3]

அத்துடன், சிற்றுந்துகள் வாங்குவதற்கான செலவு; அவற்றைப் பராமரிப்பதற்கான; ஆகியவை செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பார்வை கொமுட்டர் தொடருந்து சேவையின் மீது திரும்பியுள்ளது.[4]

சிறப்பியல்புகள்[தொகு]

இந்த வகை கொமுட்டர் தொடருந்துகளின் பொதுவான பயண தூரம் 15 முதல் 180 கி.மீ. வரை இருக்கும்; வேகம் மணிக்கு 55 முதல் 175 கி.மீ. வரை இருக்கும். பயணிகள் வண்டிகள் ஒற்றை அடுக்கு அல்லது இரட்டை அடுக்குகளாக இருக்கலாம்.[5]

ஒற்றை அடுக்கு வண்டியில் 80 - 110 வரை பயணிகள் பயணிக்கலாம். மற்றும் இரட்டை அடுக்கு வண்டியில் 145 - 170 பேர் வரை பயணிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமுட்டர்_தொடருந்து&oldid=3781826" இருந்து மீள்விக்கப்பட்டது