கொன்யா ஒலிம்பிக் நீச்சல் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொன்யா ஒலிம்பிக் நீச்சல் குளம் (Konya Olympic Swimming Pool ) துருக்கியின் முதன்மையான நகரமான கொன்யாவில் அமைந்துள்ளது. இது ஓர் உட்புற ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் ஆகும்.[1][1][1]

கொன்யா ஒலிம்பிக் நீச்சல் குளம் துருக்கியின் கொன்யாவில் உள்ள செல்சுக்லு மாவட்டத்தில் பர்சானா சுற்றுப்புறப் பகுதியில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இசுலாமிய ஒற்றுமை விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் நிகழ்வுகளை நடத்துவதற்காக கட்டப்பட்டு, நீச்சல் குளம் 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் அன்று திறக்கப்பட்டது. கட்டிடம் 8,080 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 50மீ நீளம் கொண்ட ஓர் ஒலிம்பிக் அளவு நீச்சல் குளமும் 25 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு குறைந்த நீள நீச்சல் குளங்களும் இங்கு உள்ளன. கூடுதலாக, பயிற்சி மற்றும் குதித்து மூழ்குதல் நிகழ்வுகளுக்கு நீச்சல் வளாகத்தில் 20 மீட்டர் அகலமும் 5மீட்டர் ஆழமும் கொண்ட வசதியான குளத்துடன் கூடிய ஏழு நடைமேடை அம்சங்களைக் கொண்டுள்ளது.[2] விளையாட்டு அரங்கில் 1,000 பேர் அமரும் வசதியும் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Konya Olimpik Yüzme Havuzu" (in துருக்கிஷ்). Konya 2021. Archived from the original on 11 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Konya Dev Bir Spor Tesisine Daha Kavuştu" (in துருக்கிஷ்). Konya Belediyesi. 21 July 2022. Archived from the original on 21 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)