கொன்சோல்
Jump to navigation
Jump to search
![]() | |
---|---|
![]() கேடீஈ 4.2.2 பதிப்பில் கொன்சோல் | |
உருவாக்குனர் | Lars Doelle, Robert Knight |
மொழி | சி++ (KDELibs, Qt (software) |
மென்பொருள் வகைமை | Terminal emulator |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
கொன்சோல் (konsole) என்பது லினக்சின் முனைய வகைகளில் ஒன்றாகும். லினக்சின் திரைப்புல வகைகளில் ஒன்றான, கேடீஈ திட்டத்தில் இருந்து இது உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு சூலை முதல், கேடீஈ பணிக்குழுத்திட்டத்தில் இது இயல்பிருப்பாக வரும் படி இணைக்கப்பட்டு உள்ளது.[1]
சிறப்பியல்புகள்[தொகு]
- தத்தல்களை(Tab உருவாக்கிக் கொண்டு செயற்பட இயலும். ஒவ்வொரு தத்தலும் செய்யப்பட்ட கட்டளைக்கு ஒப்ப, இற்றையாகி விடும்.[2]
- ஒரு தத்தலை, பல பகுதிகளாகப் பிரித்து செயற்பட இயலும்.[3]
- வேண்டிய நிறத்தில் தெரியும் எழுத்துருக்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இயலும்.
- தமிழ் எழுத்துகள் தெளிவாகப் படிக்க இயலும்.
- குபுண்டு போன்ற இயக்குதளங்களில் இயல்பிருப்பாக இவை வருகின்றன.
- பிற உபுண்டு வகை இயக்குதளங்களில், இதனை நிறுவிக் கொள்ள, முதலில்
sudo apt-get update
என இயக்க வேண்டும், பிறகு,sudo apt-get install konsole
என்ற கட்டளையை இட வேண்டும். ஏறத்தாழ, நிறுவப்படும் இயக்குதளத்திற்கு ஏற்ப 60-80 மெகா பைட்டுகள் அளவிலான நிரல்கள் பதிவேறும்.