கொன்சா
கொன்சா | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி | |
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கொன்சாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°01′N 95°34′E / 27.02°N 95.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | திரப் மாவட்டம் |
ஏற்றம் | 1,215 m (3,986 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,229 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 792130. |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | AR |
இணையதளம் | https://tirap.nic.in/ |
கொன்சா (Khonsa), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திரப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும்.கிழக்கு இமயமலைத் தொடரில் 1215 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு கிழக்கே 289.8 கிலோ மீட்ட ர் தொலைவிலும்; அசாம் மாநிலததின் தின்சுகியாவிற்கு தெற்கே 83.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தியோமாலி நகரத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு வாஞ்சூ மற்றும் நோக்டி பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு இராமகிருஷ்ணா-சாரதா மிஷன் மற்றும் கிறிஸ்து இராஜா பள்ளிக்கூடங்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,100 குடும்பங்கள் கொண்ட கொன்சா பேரூராட்சியின் மக்கள் தொகை 9,928 ஆகும். அதில் 5,768 ஆண்கள் மற்றும் 4,160 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.27% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 721 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.00% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 45.87% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 53.08%, இசுலாமியர் 4.76%, பௌத்தர்கள் 2.82%, கிறித்தவர்கள் 34.89% மற்றும் பிற சமயத்தினர் 0.73% வீதம் உள்ளனர்.[1]
மொழிகள்
[தொகு]கொன்சாவில் பேசப்படும் மொழிகள் (2011)[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khonsa Town Population Census 2011
- ↑ "C-16: Population by mother tongue, Arunachal Pradesh". Census of India. 2011. Retrieved 2 March 2024.