கொத்து பரோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொத்து
Kotthu s piletinom.JPG
சிக்கன் கொத்து
மாற்றுப் பெயர்கள்கொத்து
பரிமாறப்படும் வெப்பநிலைMain course
தொடங்கிய இடம்இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்கோதுமை, மைதா ரொட்டி
Cookbook: கொத்து  Media: கொத்து

குத்து அல்லது கொத்து என அழைக்கப்படும் இவ்வகை உணவானது, பரோட்டாவை சிறிய அளவில் உதிர்த்து, சூடான கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியோடு கலந்து நன்கு கொத்தி அதில் முட்டையை உடைத்து ஊற்றி, கொஞ்சம்  சால்னாவையும் ஊற்றி மேலும் கொத்துவார்கள். கடைசியில் மிளகு சேர்த்து பரிமாறுவார்கள். மிக சூடாக உண்ணுவதற்கு அருமையாக இருக்கும்.  இதை முட்டை பரோட்டா என்றும் கூறுவார்கள். இப்போது இதில் சிக்கன் துண்டுகளையும், மட்டன் துண்டுகளையும் கூட சேர்த்து கொத்தி, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து என்று பல்வேறு விதங்களில் பரிமாறுகின்றனர். சைவ கொத்துப்பரோட்டாவில், முட்டைக்கு பதில் முட்டைகோஸ், காரட் மற்றும் குடை மிளகாய் போன்ற காய்கறிகளை சேர்ப்பார்கள்.</ref>[1][2]

வரலாறு[தொகு]

பெரும்பாலான மக்கள் பரோட்டா உணவுகளின் ஆரம்பமாக இலங்கை என உறுதியாக சொன்னாலும் பெயர்க்காரணத்தைக் கொண்டு இந்தியாவையும் பூர்வீகமாகக் கொள்ளலாம். ஆனால் பரோட்டா உணவுகளின் பூர்வீகத்தைப் பற்றிய உறுதியான ஆதாரம் எங்கும் இல்லை. வட இந்தியாவில் 'பராத்தா', மொரீஷியஸில் 'ஃபராட்டா’, மியான்மரில் 'பலாட்டா’ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 'பராத்தா' என்கிற வார்த்தையின் மூலம் சமஸ்கிருதத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வேத காலத்தில், 'புரோதாஷா' என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் சேர்த்து செய்திருப்பார்களாம். அந்த 'பு-ரோ-தா-ஷம்'தான் 'பராத்தா' ஆனது என நம்பப்படுகிறது. ஏனெனில் தொடக்கத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் மற்ற எண்ணெய்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். 

தயாரிப்பு[தொகு]

தேவையான பொருட்கள்[தொகு]

 • பரோட்டா - 3 எண்ணிக்கை
 • முட்டை - 1
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 1
 • பச்சைமிளகாய் - 2
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - 4 ஸ்பூன்
 • கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி
 • பூண்டு - 8 பல்
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 • தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
 • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் கொத்து பரோட்டா
முட்டை கொத்து பரோட்டா

செய்முறை:

ஏற்கனவே செய்து வைத்து நன்கு ஆற வைக்கப்பட்ட பரோட்டாவை கையால் சிறு சிறு துண்டுகளாக பிய்த்து தனியாக வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி,  பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் அல்லது சூடான இரும்பு கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை மசியும் வரை வதக்கவும். அனைத்தும் நன்றாக  வதங்கியதும், சோம்பு தூள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும். முட்டை நன்றாக வெந்து வதங்கியதும் அதில் சால்னா சேர்த்து ஒருசேர கிளறவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும். சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக  பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன்,  மட்டன், மீன் என அனைத்து வகையான மாமிச உணவுகளைச் சேர்த்தும் செய்யலாம். சைவ கொத்து பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் முட்டைக்கு பதில் கேரட், முட்டைகோஸ் மற்றும் குடை மிளகாய் போன்றவைகளைக் கொண்டு செய்யலாம்.

சைவ கொத்து பரோட்டா

கொத்து பரோட்டா சிறப்புகள்[தொகு]

தென் தமிழகத்தின் மாவட்டங்களான மதுரை விருதுநகர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகப் பிரபலமாக விளங்கும் இவ்வுணவுப் பொருளானது மிகச் சிறப்பான முறையில் சமைக்கப்பட்டு சுவையாக பரிமாறப்படும் சிறந்த மாலை நேர உணவாகும்.[3][4]

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கையிலும் கிடைக்கப்பெறும் எளிய மக்களின் உணவாகும்.[5] சாலையோரங்களில் உள்ளதட்டுக் கடை என அழைக்கப்படும் மாலை நேர உணவங்களில் இது பரவலாக தயாரிக்கப்படுகிறது. சமீப காலமாக மற்றொரு தென்னிந்திய உணவான இட்லியும் இம்முறையில் கொத்து இட்லி என சமைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்து_பரோட்டா&oldid=2867330" இருந்து மீள்விக்கப்பட்டது