கொத்திக அமோகவர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொத்திக அமோகவர்சன் (Khottiga Amoghavarsha ஆட்சிக்காலம் 967-972 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசின் மன்னனாவான். இவனது காலகட்டத்தில் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பரமரா அரசன் இரண்டாம் சியகா இராஷ்டிரகூடர்கள் மீது போர்தொடுத்தான். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மான்யகட்டாவை கொள்ளையிட்டனர். இப்போரில் மன்னன் கொத்திக அமோகவர்சன் இறந்ததாக கருதப்படுகிறது. இந்த தகவல் சமண அறிஞர் புஷபதந்தா எழுதிய சமண நூலான மகாபுராணத்தில் இருந்து கிடைக்கிறது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கர்கன் ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆண்டான்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்திக_அமோகவர்சன்&oldid=2487936" இலிருந்து மீள்விக்கப்பட்டது