கொண்டையாங்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொண்டையாங்குப்பம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கொண்டையாங்குப்பம் (Kondaiyakuppam) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம்.[4] இக்கிராமம் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. திண்டிவனம், வந்தவாசி போன்றவை அருகிலுள்ள நகராட்சிகளாகும். இக்கிராமப் பஞ்சாயத்து 1918ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கிராமம் மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது பெற்றது. தனி வருவாய் கிராமமாக பிரிக்காததால், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மக்களவை தேர்தலை இக்கிராம மக்கள் புறக்கணித்தனர்[5]. ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையான 2,025 பேரில் 1,150 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இந்த ஊரில் ஆதிதிராவிடர் காலனி, அருந்ததியர் பாளையம், இந்திரா நகர், ஊத்துக்குளம் ஆகியப் பகுதிகள் உள்ளன.

மண்வளமும் நீர்வளமும்[தொகு]

கொண்டையாங்குப்பம், 5,85,10 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, அனைத்து வகை மண் வகைகளும் காணப்படுகிறதென்றாலும், செம்மண் பகுதியே அதிக அளவில் உள்ளது. இக்கிராமத்தில், 6 குடிநீர் தேக்கத் தொட்டிகள் மூலம் குடி தண்ணீர் வழங்கப்படுகிறது[6]. விவசாய நீர்பாசனத்திற்கு, கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இங்கு 12 குளங்கள் உள்ளன. நெல் பயிர் இங்கு முக்கியமான பயிரிடப்படுகிறது. இதுமட்டுமின்றி, தோட்டப்பயிர்களான கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவைக்காய், வெள்ளரிக்காய் போன்றவையும், கரும்பு, கேழ்வரகு, எள், மிளகாய், முள்ளங்கி போன்றவையும் பயிரிடப்படுகின்றன. இக்கிராமத்தில், ஏழு நெற்களங்கள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

சென்னையிலிருந்து,130 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து, 73 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து, 25, 10 ஆகிய எண் கொண்ட அரசுப் பேருந்துகளும், வந்தவாசியிலிருந்து, 9, 10, 13 ஆகிய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னை கிண்டியிலிருந்து, தெள்ளார் வரை இயக்கப்படும் பேருந்து, கொண்டையாங்குப்பம் வழியாகச் செல்கிறது.

இதர வசதிகள்[தொகு]

இங்கு, ஆரம்பப்பள்ளியும், நடுநிலைப்பள்ளியும், சத்துணவுக்கூடமும் உள்ளன. பொது நூலக வசதியும் உள்ளது. இவ்வூருக்கென தனி நியாயவிலைக் கடை மட்டுமல்லாது, மகளிர் குழு கட்டிடம், சுகாதார கட்டிட வளாகம் போன்றவையும் உள்ளன. அஞ்சல் அலுவலகம் மாவலவாடி கிராமத்தில் உள்ளது. இக்கிராமத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. இங்கு, அனைத்து தெருக்களிலும் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.

கோவில்களும் விழாக்களும்[தொகு]

இக்கிராமத்தில், திரவுபதி அம்மன், பொன்னியம்மன் கோவில்கள், பெருமாள் கோவில், வினாயகர் கோவில்கள் உள்ளன. இந்த ஊரில், பாரத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 15 நாட்கள் பாரத சொற்பொழிவும், 14 நாட்கள் தெருக்கூத்தும் நடத்தப்படுகின்றன. இந்த ஊரில் பொங்கல் பண்டிகை, தீபாவளி, தை அமாவாசை, பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை பஜனை, வருடப்பிறப்பு ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டையாங்குப்பம்&oldid=1458708" இருந்து மீள்விக்கப்பட்டது