கொண்டுரா
| கொண்டுரா (இந்தி) அனுகிரகம் (தெலுங்கு) | |
|---|---|
| இயக்கம் | சியாம் பெனகல் |
| தயாரிப்பு | கே. வெங்கட் ராமா ரெட்டி |
| கதை | ஆருத்ரா (வசனம்) |
| திரைக்கதை | சியாம் பெனகல் கிரீஷ் கர்னாட் |
| இசை | வன்ராஜ் பாதியா |
| நடிப்பு | அனந்த் நாக் வாணிஸ்ரீ சுமிதா பட்டீல் அம்ரீஷ் பூரி இராவ் கோபால் இராவ் சத்யதேவ் துபே வேணு |
| ஒளிப்பதிவு | கோவிந்த் நிஹலானி |
| வெளியீடு | 1978 |
| ஓட்டம் | 137 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி தெலுங்கு |
கொண்டுரா (Kondura) என்பது 1978-ஆம் ஆண்டு வெளியான இந்திய இருமொழித் திரைப்படமாகும். இதனை சியாம் பெனகல் இயக்கியுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. மராத்தி எழுத்தாளர் சிந்தாமணி டி. கானோல்கர் எழுதிய கொண்டுரா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இதன் திரைக்கதை வடிவாக்கத்தில், சியாம் பெனகலும் கிரீஷ் கர்னாடும் இணைந்து பணியாற்றினர்.[1]
இரு மொழிப் பதிப்புகளிலும் பெரும்பாலான நடிகர்கள் ஒரே மாதிரியாக இடம்பெற்றனர். அவர்களில் அனந்த் நாக், வாணிஸ்ரீ, அம்ரீஷ் பூரி, சத்யதேவ் துபே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திப் பதிப்பில் சேகர் சட்டர்ஜியும், தெலுங்குப் பதிப்பில் இராவ் கோபால் இராவ் அவர்களும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 4வது ஆங்காங் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]பரசுராம் என்ற இளைஞன் தனது அண்ணனின் அவமதிப்பால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது கடலிலிருந்து தோன்றும் கொண்டுரா சுவாமி, கிராமத்தைத் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தியை அவருக்கு அளிக்கிறார். அந்த அருளைப் பாதுகாக்க பரசுராம் தவவாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. கிராமத் தெய்வத்தின் வழிகாட்டுதலின்படி அவர் கோயிலைப் புதுப்பித்து மக்களிடையே மதிப்புமிக்க ஆன்மிக குருவாக உயர்கிறார்.
கிராம ஜமீன்தாரான பைரவமூர்த்தி கொடூர மனிதராக இருக்கிறார். அவரது வீட்டில் வாழும் பார்வதி கர்ப்பமாகிறார். அந்தக் குழந்தை பைரவமூர்த்தியின் பாவத்தின் அடையாளம் என தவறாக நம்பிய பரசுராம், கொண்டுரா கொடுத்த மூலிகையைப் பயன்படுத்தி கருக்கலைப்பு செய்கிறார். பின்னர் உண்மையை அறிந்த அவர் கடும் மனவேதனையில் ஆழ்கிறார். பாவநிவாரணம் தேடி தவறான முடிவுகளை எடுப்பதால், அவரது மனைவி அன்சூயா தற்கொலை செய்கிறாள். இறுதியில் பரசுராம் குற்றவுணர்ச்சியுடன் துயரத்தில் சிக்கிக்கொள்கிறார்.
கதை மாந்தர்கள்
[தொகு]- அனந்த் நாக் – பரசுராம்
- வாணிஸ்ரீ – அன்சூயா, பரசுராமின் மனைவி
- சுமிதா பட்டீல் – பார்வதி
- வேணு – வாசு
- சத்யதேவ் துபே – ராமநாய்யே மாஸ்டர்
- அம்ரீஷ் பூரி – கொண்டுரா / அப்பிகொண்ட சுவாமி
- சேகர் சட்டர்ஜி – பைரவமூர்த்தி (இந்திப் பதிப்பு)
- இராவ் கோபால் இராவ் – பைரவமூர்த்தி (தெலுங்குப் பதிப்பு)
- சுலபா தேசுபாண்டே – காந்தம்மா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Boon filmreference
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 3 March 2016. Retrieved 22 September 2014.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)