உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டுதலைக்கழிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டுதலைக்கழிதல் என்பது தலைவன் தலைவியை, அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்து தர மறுக்கும்போது, தோழியின் உதவியால், தலைவியைத் தன் ஊருக்குக் கொண்டு சென்று மணந்துகொள்வதற்காகத் தலைவியைக் கொண்டுசெல்லல்.

  • இதில் தலைக்கழிவு என்பது தலைமையான செலவு எனப் பொருள்படும்.

தொல்காப்பியம் அன்பின் ஐந்திணை உரிப்பொருள்களைக் கூறும்பொது கொண்டுதலைக்கழிதல் என்பதையும் ஓர் உரிப்பொருளாகக் காட்டுகிறது. இது புணர்தலா, பிரிதலா எனக் கொள்ளமுடியாதபடி அமைந்திருப்பதால் இதனை தனி உரிப்பொருளாகச் சுட்டுகிறது. [1]

பிற்கால நம்பியகப்பொருள் அகத்திணையை அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தாகப் பகுத்துக்கொண்டு விளக்கும்போது வரைவியலில் ஒன்றாக வைத்துக்கொண்டுள்ளது. [2]

இக்காலத்தில் தோழி அனுப்பிவைத்தல், நற்றாய் பலம்பல், செவிலி தேடிச் செல்லல், கண்டோர் கூறுதல், முதலானவை நிகழும்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. தொல்காப்பியம், அகத்திணையியல் 17
  2. நம்பியகப்பொருள், வரைவியல் 181, 182
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டுதலைக்கழிதல்&oldid=3396910" இலிருந்து மீள்விக்கப்பட்டது