கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.வி. ரங்கா ரெட்டி
Konda Venkata Ranga Reddy, 1952.jpg
கே.வி. ரங்கா ரெட்டி
துணை முதல்வர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
1959 -1962
தொகுதி சேவெள்ள மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 திசம்பர் 1890
பெத்தமங்களம், மொயினாபாத் மண்டலம், ரங்காரெட்டி மாவட்டம், இந்தியா
இறப்பு 24 சூலை 1970 (வயது 79)
ஐதராபாத்து
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) துங்கபத்ரம்மா
பிள்ளைகள் கொண்டா மாதவ ரெட்டி
இருப்பிடம் பெத்தமங்களம், மொயினாபாத் மண்டலம், ரங்காரெட்டி மாவட்டம்

கே. வி. ரங்கா ரெட்டி (12 திசம்பர் 1890 - சூலை 24 1970) என அழைக்கப்படும் கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி (Konda Venkata Ranga Reddy) ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வராக இருந்தார். [1] சாகிர்தார்களுக்கு எதிராக தெலங்காணா கிளர்ச்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராளியாவார். தெலங்காணாவில் உள்ள இரங்கா ரெட்டி மாவட்டத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.

தொழில்[தொகு]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஐதராபாத்து மாநிலத்திற்கு எதிராக இருந்த இரசாக்கர்களை சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைக்க போராடியதற்காக தெலங்காணாவில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. [2]

நீலம் சஞ்சீவ ரெட்டியின் அரசாங்கத்தில் 1959இல் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். 1961ஆம் ஆண்டில் தாமோதரம் சஞ்சீவய்யா அரசாங்கத்தில் ஆந்திராவின் துணை முதல்வராக ஆனார். இவர் தெலங்காணா இயக்கத்தில் பங்கேற்றார். சித்தியம்பார் சந்தையில் பேசிய இவரது ஆவேசமான பேச்சுக்கு பெயர் பெற்றவர். இப்பேச்சில் இவர் குலாம் கி ஜிந்தகி சே, மௌத் ஆச்சி என்ற சொற்களால் முடித்தார் .

கல்வியாளர்[தொகு]

இவர், கல்வி நிறுவனமான ஏ. வி கல்லூரியையும் நிறுவினார். [1] பெண்களும், சிறுமிகளும் தங்களின் நோக்கத்தை அடைவதற்கு உதவுவதற்காக 1952ஆம் ஆண்டில் சங்கம் இலட்சுமிபாய் என்பவரால் நிறுவப்பட்ட "இந்திர சேவா சதன் சங்க"த்தில் உறுப்பினராகவும் இருந்தார். [3] அறக்கட்டளை நடத்திவரும் பெண்கள் கல்லூரிக்கு இவரின் நினைவாக கே. வி. இரங்கா ரெட்டி மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டது. இவர், மகளிர் விடுதி ஒன்றையும் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர், துங்கபத்ராம்மா என்பவரை மணந்தார். [4] இவர்களுக்கு, 7 மகன்களும், 4 மகள்களும் என 11 குழந்தைகள் இருந்தனர். இவரது மகன்களில் ஒருவரான கொண்டா மாதவ ரெட்டி ஐதராபாத் உயர் நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். இவரது பேரன்களில் ஒருவரான கே. விஸ்வேஸ்வர ரெட்டி அரசியல்வாதியாகவும், தெலங்காணாவின் சேவெள்ள மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். 1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் ஒருவரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியுமான மாரி சன்னா ரெட்டி இவரது உறவினராவார். இவரது சகோதரரின் (கொண்டா நாராயண ரெட்டி) மகளை மணந்தார்.

நூலியல்[தொகு]

  • My Autobiography By K V Ranga Reddy

குறிப்புகள்[தொகு]