கொண்டா மாதவ ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீதியரசர்
கொண்டா மாதவ ரெட்டி
ஆந்திர மாநிலத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1982–1984
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1984–1985
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 21, 1923(1923-10-21)
சராஜ்பேட்டை கிராமம், நல்கொண்டா மாவட்டம், தெலங்காணா
இறப்பு 25 செப்டம்பர் 1997(1997-09-25) (அகவை 73)
ஐதராபாத்து
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயலதா தேவி
பிள்ளைகள் கே. விஸ்வேஸ்வர ரெட்டி

நீதிபதி கொண்டா மாதவ ரெட்டி (Konda Madhava Reddy) (1923-1997) ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும். பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றிய முன்னாள் தலைமை நீதிபதியாவார். மேலும் இவர், புது தில்லியின் சிறிய மாநிலங்களின் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமாவார். [1] [2] [3] [4] [5] இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரிய மற்றும் கல்வி, கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளில் இந்திய நீதித்துறையில் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், 1923 அக்டோபர் 21 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள சராஜ்பேட்டையில் கொண்டா வெங்கட ரங்கா ரெட்டிக்கும், துங்கபத்ரம்மா ஆகியோருக்கு பிறந்தார். இவர் சுதந்திர போராளிகளின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை 1957 முதல் 1962 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும், வருவாய்துறை அமைச்சராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருந்தார்.[6]

கல்வி[தொகு]

  • ஐதராபாத்தில் உள்ள சதர்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றார்.
  • ஐதராபாத்தின் நிசாம் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • புனே பல்கலைக்கழகத்தின் பெர்குசன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையை பெற்றார்.
  • மும்பை பல்கலைக்கழகத்தில் தனது சட்டப்படிப்பை முடித்தார்.

குடும்பம்[தொகு]

இவர், ஜெயலதா தேவி என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு 3 மகள்களும், 1 மகனும் இருந்தனர். இவரது மகன் கொண்டா விசுவேசுவர ரெட்டி, தெலங்காணாவிலுள்ள சேவெள்ள மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார் . [7]

இறப்பு[தொகு]

நீதிபதி கொண்டா மாதவா ரெட்டி 25 செப்டம்பர் 1997 அன்று, குருதிப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டா_மாதவ_ரெட்டி&oldid=3104277" இருந்து மீள்விக்கப்பட்டது