கொண்டா சுரேகா
கொண்டா சுரேகா Konda Surekha | |
---|---|
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
தொகுதி | வாரங்கல் கிழக்கு (சட்டமன்ற தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 திசம்பர் 2023 | |
முன்னையவர் | நம்புனேனி நரேந்தர் |
தொகுதி | வாரங்கல் கிழக்கு |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) | |
பதவியில் 2009–2012 | |
தொகுதி | பார்கால் (சட்டமன்ற தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) | |
பதவியில் 1999–2009 | |
முன்னையவர் | பசவராஜூ சாரையா |
பின்னவர் | நம்புனேனி நரேந்தர் |
தொகுதி | சியாம்பேட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 ஆகத்து 1965 வாரங்கல் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு(2011 முதல்-2018-வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2011-2013) பாரத் இராட்டிர சமிதி (2013-2018) |
துணைவர் | கொண்டா முரளி |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | ஐதராபாத்து (இந்தியா) |
கொண்டா சுரேகா (Konda Surekha)(பிறப்பு: ஆகஸ்ட் 19, 1965) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் ஆவார். இவர் தெலங்காணாவில் உள்ள சியாம்பேட், பர்கல் மற்றும் வாரங்கல் கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கோண்டா சுரேகா இந்தியாவின் வாரங்கல் நகரில் தும்மா சந்திரமௌலி மற்றும் தும்ம ராதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். சுரேகா கொண்டா முரளியை மணந்தார்.
பணி
[தொகு]கொண்டா சுரேகா 1995-ல் மண்டல் பரிஷத் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் பிசிசி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1999ல் சாயம்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் இவர் காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் பொருளாளராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழு, சுகாதாரம் மற்றும் தொடக்கக் கல்வி நிலைக்குழு உறுப்பினராகவும் ஆனார். 2000ஆம் ஆண்டு அகில இந்தியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2004-ல் சியாம்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல் காங்கிரசு கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவர் 2005-ல் மாநகராட்சி அலுவலக உறுப்பினரானார். 2009-ல் இவர் பர்கல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சுரேகா பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலம், ஊனமுற்றோர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
சுரேகா எ. சா. ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலம், ஊனமுற்றோர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[3] ஆனால் எ. சா. ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்குப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் முதலமைச்சராகப் பதவியேற்காததால் தனது பதவியிலிருந்து விலகினார்.[4][5]
சுரேகா 4 சூலை 2011 அன்று பதவி விலகினார்.[6] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி வேட்பாளராக பர்கல் சட்டமன்றத் தொகுதியில் 12 சூன் 2012 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினரின் மோசமான நடத்தை காரணமாக இவர் சூலை 2013-ல் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இவர் பாரத் இராட்டிர சமிதி கட்சியில் சேர்ந்து வாரங்கல்-கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[7] வாரங்கல் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) தொகுதியில் 55,085 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.
2018-ல் சுரேகா தனது கணவருடன் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[8]
அரசியல் புள்ளிவிவரங்கள்
[தொகு]ஆண்டு | போட்டியிட்ட பதவி | கட்சி | தொகுதி | இரண்டாமிடம் | வாக்குகள் | பெரும்பான்மை | முடிவு | |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 1995 | எம்.பி.பி | இதேகா | வெற்றி | ||||
2 | 1999 | சட்டமன்ற உறுப்பினர் | சியாம்பேட்டை | தேவு சாம்பையா (பாஜக) | 43384–42813 | 571 | வெற்றி[9] | |
3 | 2004 | பிரேமந்தர் ரெட்டி குஜ்ஜுலா (பாஜக) | 72454–28430 | 44024 | வெற்றி[10] | |||
4 | 2009 | பார்க்கல் | பிக்ஷபதி மொலுகுரி (டிஆர்எஸ்) | 69135–56335 | 12800 | வெற்றி[11] | ||
5 | 2012 – இடைத்தேர்தல் | ஒய்.எஸ்.ஆர்.சி.பி | பிக்ஷபதி மொலுகுரி (டிஆர்எஸ்) | 51936–50374 | 1562 | தோல்வி [12] | ||
6 | 2014 | பாஇராச | வாரங்கல் கிழக்கு | பஸ்வராஜு சரையா (இதேகா) | 88641–33556 | 55085 | வெற்றி[13] | |
7 | 2018 | இதேகா | பார்க்கல் | சல்லா தர்ம ரெட்டி (டிஆர்எஸ்) | 105903-59384 | 46519 | தோல்வி[14] | |
8 | 2023 | இதேகா | வாரங்கல் கிழக்கு | எரபெல்லி பிரதீப் ராவ் (பாஜக) | 67757-52105 | 15652 | வெற்றி |
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கோண்டா சுரேகா, வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரும், காங்கிரசு தலைவருமான கோண்டா முரளியை மணந்தார்.[15] இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சர்ச்சைக் கருத்தும் வழக்கும்
[தொகு]தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை சமந்தா ஆகியோரின் மணமுறிவிற்கு முன்னாள் தெலங்காணா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே. டி. ராமராவ் காரணம் என இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியால் சர்ச்சையில் சிக்கினார். இவரது பேட்டிக்கு நடிகை சமந்தா டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.[16] நாக சைத்தன்யாவின் தந்தையும் முன்னனி நடிகருமான நாகார்ஜூனாவும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நாம்பள்ளியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.[17] திரையுலக பிரமுகர்களின் தொடர் கண்டனங்களைத் தொடர்ந்து அமைச்சர் சுரேகா தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கோரினார்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Konda Surekha Profile".
- ↑ PTI (2011-07-04). "Telangana issue: Jagan loyalist MLA quits". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
- ↑ "Surekha gives a setback to Rosaiah leadership in Andhra Pradesh with resignation". Sify. 2009-10-30. Archived from the original on 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
- ↑ "Andhra minister's resignation accepted". Sify. 2009-10-30. Archived from the original on 21 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
- ↑ Menon, Amarnath K. and Priya Sahgal "Why Sonia fears Jagan?" இந்தியா டுடே 26 November 2010
- ↑ "Cong says it's not opposed to Telangana". Hindustan Times. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
- ↑ "Konda couple joins TRS". The Hindu. 19 March 2014. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/konda-couple-joins-trs/article5801843.ece.
- ↑ "Days after internal revolt in TRS, Konda Surekha and husband join Congress". The News Minute (in ஆங்கிலம்). 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Parkal Election Result 2018 Live Updates: Candidate List, Winner, Runner-up MLA List".
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 15 December 2018. பார்க்கப்பட்ட நாள் 12 December 2018.
- ↑ "Konda couple joins TRS". The Hindu. 19 March 2014. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/konda-couple-joins-trs/article5801843.ece. பார்த்த நாள்: 2 August 2018.
- ↑ https://www.puthiyathalaimurai.com/cinema/samantha-angry-reply-to-telangana-minister-konda-surekha
- ↑ https://tamil.news18.com/live-updates/tamil-live-breaking-news-and-tamilnadu-weather-updates-on-3rd-october-2024-1613641.html
- ↑ https://cinema.vikatan.com/tollywood/samantha-issue-konda-surekha-retracted-her-statement