கொண்டப்பள்ளி காப்புக் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் கொண்டப்பள்ளி காப்புக் காடு (Kondapalli Reserve Forest) உள்ளது. இந்த காப்புக் காடு 30,000 ஏக்கர்கள் (120 km2) நிலப்பரப்பில் ஆந்திர மாநில வனத்துறையின் பாதுகாப்பில் உள்ளது.[1]

விலங்குகள்[தொகு]

சிறுத்தை, செந்நாய் மற்றும் குள்ளநரி, இந்திய ஓநாய்கள், இந்தியப் புனுகுப் பூனை போன்ற ஊனுண்ணி விலங்குகள் இந்த காட்டில் உள்ளது. காட்டுப்பன்றி, கடமான், புள்ளிமான், கேளையாடு, செம்முகக் குரங்கு மற்றும் நாற்கொம்பு மான் ஆகியவையும் இக்காட்டில் உள்ளன. இவற்றுடன் தாவர உண்ணி விலங்குகளில் மயில், காட்டுக் கோழி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன.[2]

தாவரங்கள்[தொகு]

டெல்லா போனிகி மென் மரம் இக்காட்டில் காணப்படுகிறது. இது கொண்டப்பள்ளி பொம்மைகள் தயாரிக்கப் பயனுள்ளதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://wiienvis.nic.in
  2. Ramana Rao, G.V (25 May 2006). "Presence of leopards, wild dogs detected in Krishna forests". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article3137601.ece. பார்த்த நாள்: 2 February 2016. 
  3. Ameen, MD (21 January 2013). "50% Kondapalli artisans quit". http://www.newindianexpress.com/states/andhra_pradesh/article1428927.ece. பார்த்த நாள்: 2 February 2016.