கொட்டைக் கரந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொட்டைக் கரந்தை[தொகு]

தாவரவியல் பெயர்-ஸ்பெரான்தஸ் இண்டிகஸ், தாயகம் - ஆப்பிரிக்கா கரந்தைப்பூ, சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, கருங்கரந்தை, நாறும்கரந்தை, குத்துக்கரந்தை, சிறுகரந்தை, சுனைக்கரந்தை, சூரியக் கரந்தை, விஷ்ணுக்கரந்தை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த கரந்தைப்பூ மூன்று வகைப்படும். விஷ்ணுக் கரந்தை நீல நிறத்திலும், சிவகரந்தை வெள்ளை நிறத்திலும் பூக்கும். கொட்டைக் கரந்தையானது நெருஞ்சில் காயைப்போன்று கூட்டுக்காயாக இருக்கும். கொட்டைக்கரந்தை ஈரமான இடங்களில் நெல் வயல்களில் களைச்செடியாகவும், வரப்புகளின் ஓரங்களிலும் வளரக்கூடியது. மருத்துவ குணம்: கொட்டைக்கரந்தை செடிகள் பூப்பதற்கு முன்பாக அவற்றைப்பிடுங்கி நிழலில் உலரவைத்துப் பொடியாக்கி தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு எடுத்துத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு, பார்வைத்திறன் அதிகரிக்கும். கொட்டைக் கரந்தைப் பொடியுடன் அதே அளவு கரிசலாங்கண்ணிப் பொடியைச் சேர்த்து தேனுடன் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், இளநரை விலகுவதோடு உடல் பலம்பெறும். கொட்டைக் கரந்தையின் முழுச்செடியை கஷாயமாக்கி அதனுடன் சீரகத்தைப் பொடித்துப்போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டைக்_கரந்தை&oldid=2723549" இருந்து மீள்விக்கப்பட்டது