கொட்டியாரப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டியாரப்பற்று[1] அல்லது கொட்டியாரபுரப்பற்று எனப்படுவது இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், சேருவில ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட பிரதேசமாகும்.

ஏறத்தாழ 615 சதுகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமான இப்பகுதியிலேயே இலங்கையின் நீளமான நதியாகிய மகாவலி கங்கை சமுத்திரத்தில் கலக்கின்றமையால் வளம் நிறைந்த பிரதேசமாகவும் விளங்குகின்றது.

ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சிறந்த கேந்திர முக்கியத்துவம் கொண்ட வாணிபத்துறையாக விளங்கியிருந்தது. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கொட்டியாரக் கோட்டை (Koddiyar fort) இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதுவே ஒல்லாந்தரால் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கோட்டை ஆகவும் கூறப்படுகின்றது. எனினும் போர்த்துக்கேயரால் அரைவாசியிலேயே இடிக்கப்பட்டு பின்னர் மீண்டும் 1658 இல் கட்டப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்தில் கொட்டியாரபுரத்து வன்னிமையான இருமரபுந்துய்ய இளஞ்சிங்க வன்னிமை ஒல்லாந்தரைத் தாக்கி விரட்டியடித்துள்ளார். அவ்வாறே பிரித்தானியர் காலத்தில் 1803 இல் ஆங்கிலேயருக்கு எதிராக பண்டார வன்னியன் கொட்டியாரபுரத்தின் மீது படையெடுப்பு ஏற்படுத்தியுள்ளைமயையும் அறியமுடிகின்றது.

மேற்கோளகள்[தொகு]

  1. "தம்பலகாமப்பற்று வன்னிபம் 4.கொட்டியாரப்பற்று வன்னிபம் ♥வன்னிபம்என்பது சிற்றரசுகளையே குறிக்கிறது.இலங்கை வரலாற்றில் ..." 2 பெப்ரவரி 2016. Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டியாரப்பற்று&oldid=3577065" இலிருந்து மீள்விக்கப்பட்டது