கொட்டார சம்பா
| கொட்டார சம்பா |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| தோற்றம் |
| பண்டைய நெல் இரகம் |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
கொட்டார சம்பா (Kottara Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குரிய இந்நெல் இரகத்திற்கு, மொழிக் கருப்பு சம்பா என்ற பெயரும் உண்டு. அரசர்களின் குடும்பத்துக்காகவே கொட்டார சம்பா நெல்லை நாஞ்சில் நாட்டு மக்கள் உற்பத்தி செய்தாகவும், நாஞ்சில் நாட்டு மக்கள் பிரதான உணவாக கொட்டார சம்பா அரிசியை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. கொட்டாரம் என்றால் அரண்மனை என்றும், சம்பாப் பருவத்தில் பயிரிடுவதால் "கொட்டாரச் சம்பா" என பெயர்ப் பெற்றதாக அறியப்படுகிறது.[1]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரியதான நெல் இரகம்,[2] இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது. மத்திய காலப் பயிர் வகையான இது, 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வருவதாக கருதப்படுகிறது. தடித்த நெல் இரகமான இதன் கூலம் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படும்.[1]
பயன்கள்
[தொகு]தமிழகத்தின் பாரம்பரிய நெல் இரகங்களில் மாவுச் சத்து குறைந்த அளவு கொண்ட நெல் இரகம், பல உணவு வகைகளுக்குப் பயன்படுத்தினாலும், கேரளத்தில் பிரபலமான பிட்டு பெயர் பெற்றது.[1] நோய் எதிர்ப்புத் திறன் அதிகமிருப்பதாக கூறப்படும் இது, மூளை வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் மேம்படும் எனவும், பருவமடைந்த பெண்கள் இதன் அரிசிக்கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களின் உடல் வலிமை அதிகரிக்கும் எனவும், மேலும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது.[3]
மருத்துவ குணம்
[தொகு]கொட்டார சம்பா அரிசியை உண்பதால், மூளை வளர்ச்சியும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகவும், இதன் அரிசிகாஞ்சியில் குழந்தைகளுக்கு உணவளித்து வந்தால், நோய் எதிர்ப்புத் திறன் மேம்பட்டு ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் என்றும், மேலும் பேறுகாலப் பெண்களுக்கு இந்த அரிசிகாஞ்சியில் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும், பருவமடைந்த பெண்கள் தொடர்ந்து இந்த அரிசியின் சோற்றை உண்டு வந்தால் உடல் வலிமை கூடும். அதேபோல, கன்று போட்ட மாடுகளுக்கும் கொடுக்கலாம். உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் கொண்டது எனவும் அறியப்பட்டது.[1]
புற இணைப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "கொழுப்பைக் கரைக்கும் கொட்டார சம்பா". www.hindutamil.in (தமிழ்) - 21 Feb, 2015. Retrieved 2025-10-17.
- ↑ Samba Rice Varieties in Tamil | Know about Samba Rice Varieties 8. கொட்டார சம்பா
- ↑ Anuratha et al.: Exploring traditional paddy varieties: preserving a legacy of health, culture, and biodiversity–a review page: 336