உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்டாரக்கரா மகா கணபதி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்டாரக்கரா மகா கணபதி கோவில்
பெயர்
பெயர்:கொட்டாரக்கரா மகா கணபதி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கொல்லம்
அமைவு:கொட்டாரக்கரா
கோயில் தகவல்கள்
மூலவர்:கணபதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியா

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் எனும் ஊரிலிருந்து வடகிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்கரா.

கோயிலமைப்பு[தொகு]

இங்கு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ளது. இந்தக் கருவறைக்குப் பின்புறம் மேற்கே பார்த்து அமர்ந்திருக்கும் படிஞ்ஞாறு பகவதி கோயில் உள்ளது. படிஞ்ஞாயிறு என்றால் மேற்கு என்று பொருள். இந்தக் கோயிலின் மூலவராக சிவபெருமான் இருப்பினும், இங்குள்ள மகாகணபதி கோயில்தான் புகழ்பெற்று விளங்குகிறது. கருவறையை ஒட்டியபடி தெற்கு நோக்கி இவருக்கு கோயிலுள்ளது. பலாமரத்திலான திருமேனி கொண்ட கணபதி, கையில் அப்பம் ஒன்று வைத்திருக்கிறார். முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் கொழுக்கட்டைப் பிரியரான கணபதி இங்கு நெய்யப்பப் பிரியராக இருக்கிறார்.

மேலும் காண்க[தொகு]