குட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொட்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சில்லுக்கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை வைக்கப் பயன்படும் பனையோலைப் பெட்டியான கொட்டான் அல்லது குட்டான்.

குட்டான் அல்லது கொட்டான் என்பது பனையோலை, நாரால் செய்யப்படும் பெட்டியாகும். இது பனைவெல்லம், சில்லுக்கருப்பட்டி (பதநீர், சுக்கு, மிளகு சேர்த்துச் செய்யப்படும் இனிப்புப் பண்டம்), இதர இனிப்புகளை வைப்பதற்குப் பயன்படுகிறது. திருமணச் சீராகத் தரப்படும் பண்டங்களை கொட்டான்களில் வைத்தே தருகிற மரபு உண்டு. சுற்றுச்சூழலுக்கு இசைவான இத்தகைய ஓலைப்பெட்டிகளின் பயன்பாடு நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் போன்றவற்றின் மிகை நுகர்வு காரணமாக அருகி வருகிறது[1]. கொட்டான்கள் உள்ளிட்ட பல்வேறு பனையோலைப் பொருட்களைச் செய்யும் தொழிலானது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி போன்ற ஊர்களில் குடும்பத் தொழிலாக பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ராமேசுவரம் ராஃபி (நவம்பர் 25, 2014). "காணாமல் போன பனையோலைப் பெட்டிகள்". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6631086.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 26, 2015. 
  2. த. கண்ணன் (நவம்பர் 12, 2009). "நாகரிக மோகத்தால் நலியும் பனைத் தொழில்". தினமணி. http://www.dinamani.com/edition_thirunelveli/article621275.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 26, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டான்&oldid=2814155" இலிருந்து மீள்விக்கப்பட்டது