கொடை வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் கொடை வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். முற்காலத்தில், போரில் வெற்றிபெறும் மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காகப் பாணர் போர்க்களத்துக்கே செல்வது வழக்கம். அவ்வாறு சென்று பாடும் பாணருக்கு மன்னன் பல்வேறு பரிசில்களையும் வழங்கிச் சிறப்பிப்பான். இதைப் பொருளாகக் கொண்டதே "கொடை வஞ்சி".

இதனை விளக்க, உச்சம், மந்தம் சமம் ஆகிய நிலைகளிலும் பண்ணிசை கொண்டு போற்றிப் பாடிய புலவர்களுக்கு மன்னன் பரிசில் கொடுத்தான்[1] என்னும் பொருள்படும் பின்வரும் கெழுப் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்"
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று

எடுத்துக்காட்டு[தொகு]

சுற்றிய சுற்றமுடன் மயங்கித் தம்வயிறு
எற்றி மடவார் இரிந்தோட - முற்றிக்
குரிசில் அடையாரைக் கொண்டகூட்டு எல்லாம்
பரிசில் முகந்தன பாண்
- புறப்பொருள் வெண்பாமாலை 45.

குறிப்பு[தொகு]

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 82

உசாத்துணைகள்[தொகு]

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடை_வஞ்சி&oldid=1551234" இலிருந்து மீள்விக்கப்பட்டது