கொடை-மாவட்டங்கள்
| கொடை மாவட்டங்கள் Ceded Districts | |||||
| பரப்பு பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
|
கொடி | |||||
| தலைநகரம் | கடப்பா | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| • | 1800–1807 | தாமசு மன்றோ | |||
| வரலாறு | |||||
| • | நிசாமால் கொடையளிக்கப்பட்ட மாவட்டங்கள் | 1800 | |||
| • | இந்திய சுதந்திரம் | 1947 | |||
கொடை-மாவட்டங்கள் (Ceded Districts) என்பவை இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் இருந்த ஒரு பகுதியின் பெயர் ஆகும். இவை 1800 ஆம் ஆண்டு நிசாமால் பிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டவையாகும். சட்டப்பூர்வம் அல்லது நிர்வாக நோக்கங்களுக்கான இந்தப் பிரிவுக்கு எந்த அதிகாரப்பூர்வ முக்கியத்துவமும் இல்லை என்றாலும், பிரித்தானிய இராச்சியத்தின் முழு காலத்திலும் இந்தப் பெயர் பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பகுதி பெரும்பாலும் நவீன இராயலசீமா பகுதியுடன் ஒத்திருக்கிறது.
வரலாறு
[தொகு]சிறீரங்கப்பட்டினம் உடன்படிக்கையைத் தொடர்ந்து, திப்பு சுல்தான் தனது வடக்குப் பகுதியை ஐதராபாத்து நிசாமுக்கு கி.பி 1792 ஆம் ஆண்டில் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
கி.பி 1796 ஆம் ஆண்டில், மராட்டியர்கள் மற்றும் திப்பு சுல்தானால் துன்புறுத்தப்பட்ட அப்போதைய நிசாம் இரண்டாம் ஆசப் சா, வெல்லசுலி பிரபுவின் துணை கூட்டணி கோட்பாட்டின் கீழ் பிரிட்டிசு இராணுவப் பாதுகாப்பைப் பெறத் தேர்ந்தெடுத்தார். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிசாம் கையகப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்களிடம் விட்டுக்கொடுத்து, மெட்ராசு பிரசிடென்சியுடன் சேர்த்தார். இந்தப் பகுதி கொடஒயளிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் இன்னும் அந்தப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய அனந்தபுரம், கடப்பா (கடப்பா), கர்னூலு (கர்னூல்), பெல்லாரி மற்றும் தும்கூரின் சில பகுதிகள் (பாவகடா தாலுகா) ஆகியவற்றை இப்பகுதி உள்ளடக்கியிருந்தது.[1]
சிறீரங்கப்பட்டனத்தில் நடைபெற்ற நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு இறந்த பிறகு, மைசூர் (மைசூர்) பிரதேசங்கள் (வரைபடம்[2]) உடையார்கள், நிசாம் மற்றும் பிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனி இடையே பிரிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Imperial Gazetteer of India, Volume 7. Vol. 1 (1909). Oxford: Clarendon Press. 1908–1931. pp. 158–176. Archived from the original on 22 November 2014. Retrieved 21 June 2007.
- ↑ Shepherd, William R (1923). "India Map 1700-1792, from The Historical Atlas R." Longmans, Green, and Co. Retrieved 2007-06-15.