உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுங்கூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லிருப்புக் கொடுங்கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகள்

கொடுங்கூண்டுகள் அல்லது பேட்டரி கூண்டுகள் (battery cages) என்பது தொழிற்சாலை பண்ணைகளால் பல்வேறு விலங்கு உற்பத்தி முறைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு விலங்கு இருப்பிட அமைப்பாகும். இருப்பினும் இம்முறை முதன்மையாக முட்டையிடும் கோழிகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அலகிலும் இடுவரிசையிலும் நெடுவரிசையிலும் இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான கூண்டுகளின் அமைப்பானது போரில் பயன்படுத்தப்படும் பீரங்கி அமைப்புக்கலத்தை (artillery battery) ஒத்தாற்போல் இருப்பதால் இவற்றிற்கு பேட்டரி கூண்டுகள் என்ற பெயர் உருவானது. இந்த சொல் பொதுவாக கோழி வளர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இதேபோன்ற கூண்டு அமைப்புகள் மற்ற விலங்குகளை அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும் சர்ச்சைககுரிய இந்தக் கொடுங்கூண்டுகள் விலங்கு நலனுக்காகப் போராடும் ஆர்வலர்களுக்கும் தொழில்துறை உற்பத்தியாளர்களுக்கும் இடையே தொடர் வாத மோதல்களை ஏற்படுத்தியுள்ளன.

நடைமுறையில் உள்ள கொடுங்கூண்டுகள்

[தொகு]

உலகளவில் முட்டையிடும் கோழிகளை அடைப்பதற்கு ரோபோ கூண்டுகள் எனப்படும் கூண்டுகள்தான் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3] இவ்வகைக் கூண்டுகள் கோழிகளிடையே ஏற்படும் வன்சண்டைகளையும் தன்னினத்தையே உண்ணும் தன்மையையும் குறைக்க வல்லவை என்று கருதப்பட்டாலும் பிரதானமாக இக்கூண்டுகள் கோழிகளிடையே மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதோடல்லாமல், அவற்றின் இயக்கத்தை முடக்கியும் இயல்பான நடத்தைகளைத் தடுத்தும் எலும்புப்புரை நோய் விகிதங்களை அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.[3] 2014-ம் ஆண்டு நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்காவில் ஏறக்குறைய 95 சதவீத முட்டை உற்பத்தி கொடுங்கூண்டு முறையில் நடைபெற்றுள்ளது.[4] ஐக்கிய இராச்சியத்தில் அந்நாட்டின் DEFRA புள்ளிவிவரத்தின் படி, 2010-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளில் 50 சதவிகிதம் கூண்டு முறையைப் பயன்படுத்தி வந்தவை (மீதமுள்ளதில் 45% கூண்டில்லா வளர்ப்பிலிருந்தும், 5% கொட்டகைகளிலிருந்தும் வந்ததாகும்).[5]

கொடுங்கூண்டுக் கோழி வளர்ப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை

[தொகு]

ஐரோப்பிய ஒன்றியத்தில் அதுவரை வழக்கத்தில் இருந்துவந்த கடுங்கூண்டுகளை ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு 1999/74/EC அவை[6] ஜனவரி 2012 முதல் விலங்குநலக் காரணங்களுக்காகத் தடை செய்தது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் கடுங்கூண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தது.[7][8] 2012 ஆண்டைய கடுங்கூண்டுத் தடையானது ஐரோப்பா முழுவதும் கூண்டு கோழிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக பிரசாரம் செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கிலாந்தில் உள்ள அனைத்து முட்டையிடும் கோழிகளும் தற்போது சுதந்திரமாக பறக்கும் பறவைகள் அல்லது கொட்டகைப் பறவைகள் என்ற தவறான கருத்து பரவலாக உருவெடுத்தது. உண்மையில் கொடுங்கூண்டுகள் சட்டவிரோதமானவையாக ஆக்கப்பட்ட பின்னரும் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அமரும் கம்பி கொண்ட "செறிவூட்டப்பட்ட" சற்றே பெரிய கூண்டுகளை உருவாக்கி அத்தடையிலிருந்து தப்ப முனைந்து அதில் வெற்றியும் கண்டனர். இது போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ள கோழிகள் தற்போது "முன்னாள் கூண்டுக் காலனிக் கோழிகள்" என்று அழைக்கப்படுகின்றன.[9]

கூண்டிலடைக்கப்பட்ட பிற விலங்குகள்

[தொகு]

உரோம பண்ணைத் தொழிலுக்காக வளர்க்கப்படும் மிங்க் எனப்படும் உரோமக்கீரி, முயல், சின்சில்லா, நரி உள்ளிட்ட விலங்குகளும் கடுங்கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படுகின்றன. சமீபத்தில், கோப்பி லுவாக் குளம்பி உற்பத்திக்காக ஆசிய பனை மரநாய்களை அடைத்து வைக்கவும் கொடுங்கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. Horne, P.L.M. Van; Achterbosch, T.J. (2008). "Animal welfare in poultry production systems: impact of EU standards on world trade". World's Poultry Science Journal (Cambridge University Press (CUP)) 64 (1): 40–52. doi:10.1017/s0043933907001705. http://library.wur.nl/WebQuery/wurpubs/fulltext/53505. பார்த்த நாள்: 11 February 2017. 
  2. Leenstra, F.; Napel, J. Ten; Visscher, J.; Sambeek, F. Van (2016). "Layer breeding programmes in changing production environments: a historic perspective". World's Poultry Science Journal (Cambridge University Press (CUP)) 72 (1): 21–36. doi:10.1017/s0043933915002743. https://www.researchgate.net/publication/291555344. 
  3. 3.0 3.1 Meseret, S. (2016). "A review of poultry welfare in conventional production system". Livestock Research for Rural Development 28 (12). https://www.researchgate.net/publication/311321712. 
  4. Greene, J.L.; Cowan, T (2014). "Table Egg Production and Hen Welfare: Agreement and Legislative Proposals". CRS Report for Congress 42534. https://pdfs.semanticscholar.org/47ce/d140eac346b2b8d59781291411dd60148bfe.pdf. பார்த்த நாள்: 11 February 2017. 
  5. "50% of UK eggs laid by free range hens". theranger.co.uk. Archived from the original on 4 April 2016. Retrieved 9 December 2011.
  6. "European Union Council Directive 1999/74/EC". Official Journal of the European Communities. European Union. 19 July 1999. Archived from the original on 7 May 2013. Retrieved 30 May 2020.
  7. "Scientists and Experts on Battery Cages and Laying Hen Welfare" (PDF). Archived (PDF) from the original on 17 May 2017. Retrieved 18 December 2014.
  8. "Animal Welfare: Commission report confirms the potential benefits of banning conventional battery cages for laying hens". europa.eu. Archived from the original on 12 January 2018. Retrieved 21 December 2014.
  9. Circular from the British Hen Welfare Trust.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கூண்டு&oldid=4266413" இலிருந்து மீள்விக்கப்பட்டது