கொடிக்கமுண்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொடிக்கமுண்டார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
சைவம், இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முக்குலத்தோர், கள்ளர்.

கொடிக்கமுண்டார் என்பது கள்ளரினத்தவரின் வீரம் செறிந்த பட்டப்பெயர் ஆகும்.[சான்று தேவை]தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை,ஆகிய இடங்களில் கொடிக்கமுண்டார்கள் வசித்து வருகின்றனர்.கள்ளரினத்தின் வெற்றியை குறிக்கும் பட்டப்பெயர்களில் கொடிக்கமுண்டார் முதன்மையானது.[சான்று தேவை] இவர்கள் சூரியகுலத்தின் வம்சாவழியினர்.மேலும் சோழ மன்னர்களின் வழியினராகவும்,படைத்தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.[சான்று தேவை]


வரலாறு[தொகு]

ராஷ்ட்ரகூடர்களின் தலைநகராக கி.பி 818 முதல் 982 வரை இருந்த மண்ணைக் ‪‎கடக்கம்(மாண்யகேத்தா -குல்பர்க்கா மாவட்டம் ,கர்நாடகா) பிறகு சாளுக்கியர் வசம் வந்தது. கி.பி 1015ல் ராஜேந்திர சோழனுக்காக மண்ணைக்கடக்கத்தில் சாளுக்கியருடன் யானைகள் மடியும் வரை தீரத்துடன் போர் புரிந்து சாளுக்கிய மன்னன் சத்யாசிரயன் பட்டத்து யானையையும் கொன்று வெற்றி பெற்ற தளபதிக்கு ராஜேந்திர சோழனால் கடக்கம்கொண்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதுவே‪ ‎கொடிக்கமுண்டார் என மருவியது.ராஜேந்திர சோழனுக்கும்‪ கொடிக்கமுண்டார்,‎மண்னைக் கொண்டான் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டது. ராஜேந்திர சோழனின் முதல் வெற்றியே கடக்கப்போர் வெற்றி தான். கடக்கப்போரின் வலுவான வெற்றி தான் சோழப்பேரரசின் எல்லையை தாய்லாந்து,மலேசியா தாண்டி இந்தோனேசியா வரை விரிவடையக் காரணம்..[சான்று தேவை]கடக்கம் என்றால் யானைகள் மடிய வகையில் வெற்றிக்கொள்ளுதல் என்பதை அகநானுற்றில்"களிறு பட கடக்கம்"என ‪‎ஆலம்பேரி சாத்தனார் குறிபபிடுகிறார்.. கொடிக்கமுண்டார் என பட்டம் வாங்கிய ஆயிரமாவது ஆண்டு 2015.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிக்கமுண்டார்&oldid=2631462" இருந்து மீள்விக்கப்பட்டது