குடகு மாவட்டம்
கொடகு (கூர்க்) | |||||||
— மாவட்டம் — | |||||||
அமைவிடம்: கொடகு (கூர்க்), கருநாடகம்
| |||||||
ஆள்கூறு | 12°25′15″N 75°44′23″E / 12.4208°N 75.7397°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
தலைமையகம் | மடிக்கேரி | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
பதில் ஆணையர் | |||||||
மக்களவைத் தொகுதி | கொடகு (கூர்க்) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
5,54,519 (2011[update]) • 135/km2 (350/sq mi) | ||||||
மொழிகள் | கன்னடம், கொடவ தாக் | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 4,102 சதுர கிலோமீட்டர்கள் (1,584 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | https://kodagu.nic.in/en/ |
குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் மடிகேரி. குடகை ஆங்கிலத்தில் கூர்க் என்று அழைப்பார்கள். 4,100 கிமீ2 பரப்புடைய இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் முதன்மை ஆறு காவிரி ஆகும். காவிரி இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன.
குடகு இராச்சியம் தனி அரசாக இருந்து வந்தது. 1834 இல் ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியில் இணைத்துக்கொண்டார்கள். 1956 மாநிலங்களை சீர் செய்யும் போது குடகு கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக சேர்த்து கொள்ளப்பட்டது.
மாவாட்ட நிர்வாகம்
[தொகு]குடகு மாவட்டம் 5 வருவாய் வட்டங்களையும், 4 நகராட்சிகளையும், 5 தாலுகா பஞ்சாயததுகளையும், 104 கிராம ஊராட்சிகளையும், 529 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]
- மடிகேரி வருவாய் வட்டம்
- சோம்வார் வருவாய் வட்டம்
- விராஜ்பேட் வருவாய் வட்டம்
- குஷால்கர் வருவாய் வட்டம்
- பொன்னம்பேட் வருவாய் வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, குடகு மாவட்டத்தின் மக்கள் தொகை 554,519 ஆகும். அதில் 274,608 ஆண்கள் மற்றும் 279,911 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.61 %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 80.97 %, இசுலாமியர் 15.74 %, கிறித்தவர்கள் 3.09 % மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[2]
வெளியிணைப்புக்கள்
[தொகு]- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் கொடகு மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2009-03-18 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]