உள்ளடக்கத்துக்குச் செல்

கொஞ்சும் குமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொஞ்சும் குமரி
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புமனோகர்
மனோரமா
வெளியீடு1963
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொஞ்சும் குமரி (Konjum Kumari) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், மனோரமா மற்றும இரா. சு. மனோகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ். வி. ராமதாஸ், ஏ. கருணாநிதி ,கே. கே. சௌந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதன் இயக்கம் ஜி. விஸ்வநாதன், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் தி. இரா. சுந்தரம் இதை தயாரித்திருந்தார். நகைச்சுவையில் புகழ் பெற்ற மனா மற்றும் கே. தேவராஜன் கதையை எழுதியுள்ளனர். இசை வேதா.[1][2][3] மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 99வது படமான "கொஞ்சும் குமரி" சென்னையில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது . [சான்று தேவை]

கதை

[தொகு]

அல்லி (மனோரமா) காட்டில் வாழும் ராணியாகும், இராஜங்கத்தை (இரா. சு. மனோகர்), ஒரு வழிப்பறிக் கும்பல் சூழ்ந்து கொண்டபோது அல்லி அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவர் மீது காதல்வயப்படுகிறாள் , ஆனால் இராஜங்கம் அவளது காதலை மறுத்து விடுகிறான். எனவே, அல்லி அவனை துப்பாக்கி முனையில் அவனை மிரட்டி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். இராஜங்கத்தின் சகோதரனை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபடும்போது, அல்லி தான் மீண்டும் அங்கு வந்து அவரை காப்பாற்றுகிறாள்,பின்னர், என்ன நிகழ்கிறது, என்பதும் காதலர்கள் இணந்தனரா என்பது படத்தின் முடிவு சொல்கிறது. [1]

நடிகர்கள்

[தொகு]
  • இரா. சு. மனோகர் - இராஜாங்கம்
  • மனோரமா - அல்லி
  • எஸ். வி. ராமதாஸ் - ஜமீன்ந்தார் ஜம்புலிங்கம்
  • ஏ. கருணாநிதி - மன்னாரு , அல்லியின் மாமன்
  • கே. கே. சௌந்தர் - சௌந்தர், அல்லியின் சகோதரன்
  • மோஹனா - பிரேமா , ஜம்புலிங்கத்தின் சகோதரி
  • ஆழ்வார் குப்புசாமி - சகாயம், அல்லியின் வளர்ப்புத் தந்தை
  • புஷ்மமாலா - தங்கம், ஜம்புலிங்கத்தின் வேலைக்காரி
  • ருக்மணி - கண்ணம்மா , இராஜாங்கத்தின் தாய்
  • ரத்னம்
  • பேபி சந்திரகலா - மீனா , இராஜாங்கத்தின் சகோதரி
  • மோகன் - மாணிக்கம் , இராஜாங்கத்தின் சகோதரன்
  • சி. எஸ். பாண்டியன்
  • வி. பி. எஸ். மணி
  • ஆர். எம். சேதுபதி
  • அருணா தேவி
  • இந்திரா தேவி

படக்குழு

[தொகு]
  • இயக்குனர்: ஜி. விஸ்வநாதன்
  • தயாரிப்பாளர்: தி. இரா. சுந்தரம்
  • இசை: வேதா
  • படப்பிடிப்புத் தளம்: மாடர்ன் தியேட்டர்ஸ்
  • கலை: பி. நாகராஜன்
  • படக்கலவை: டி. பி. கிருஷ்ணமூர்த்தி
  • ஒலிப்பதிவு: பி. எஸ். நரசிம்ஹம்
  • நடனம்: பு. ஜெயராம்
  • சண்டை: ஒய். சிவையா பானு
  • வண்ணம்: கே. வேலு

வரவேற்பு

[தொகு]

பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகை மனோரமா கொஞ்சும் குமரி படத்தில் அதிரடி நாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர்தி. இரா. சுந்தரம், படத்தொகுப்பாளாராக இருந்த ஜி. விஸ்வநாதனை இயக்குனராக்கினார்.[4] ஹாலிவுட் கதைகளை தழுவி படம் எடுப்பதில் இந்தப்படமும் தப்பவில்லை, மனோரமாவின் வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர், மேலும் நடிகர் இரா. சு. மனோகரனின் திறமையான நடிப்பினாலும், சண்டைக்காட்சிகளாலும், கே. தேவராஜனின் நகைச்சுவை வசனங்களாலும்,குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர் நல்லி ஏ. இரானியின் தந்திரக்காட்சிகளாலும், எஸ்.எஸ்.லால் மற்றும் எல். பாலுவின் படத்தொகுப்பாலும் இந்தத் திரைப்படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.[1][5]

இசை

[தொகு]

இதன் இசையமைப்பாளர் வேதா மற்றும் பாடல்களை வாலி, கருணைதாசன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் எழுதியுள்ளனர்.இதன் பாடல்களை பி. சுசீலா, கே. ஜே. யேசுதாஸ் போன்றோர் பாடியுள்ளனர்.[6] திருச்சி லோகநாதன், ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் பி. வசந்தாவும் உடன் பாடியுள்ளனர்.[7] நடன அமைப்பாளர் ஒய். சிவையா பானுவுடன் சேர்ந்து சென்னை சகோதரிகள் சசி மற்ரும் கலா ஆகியோர் நடனங்களை அமைத்திருந்தனர்.

எண். பாடல்கள் பாடியோர் நீளம் (m:ss)
1 "ஜாலியான ஜோடிகளா" பி. சுசீலா 04:57
2 "காத்திருந்தேனே நானே" 03:37
3 "மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோவமா" 03:14
4 "தோப்புல ஒரு நாள்" திருச்சி லோகநாதன் & ஏ. ஜி. ரத்னமாலா 03:14
5 "நடந்த காடு எனக்கு" பி. சுசீலா 02:45
6 "ஆசை வந்த பின்னே" கே. ஜே. யேசுதாஸ் & பி. வசந்தா 03:34
7 "வணக்கம் வணக்கம்" 04:35

பிற காரணிகள்

[தொகு]

இரா. சு. மனோகர், ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் ராஜாம்பாள் என்ற படத்தில் நடிக்க துவங்கி ,பின்னர் எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[8] மனோரமா ஒரு அற்புத திறமை மிக்க நடிகையாவார், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவரது இறப்பு வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தீவிரமாக நடித்து வந்தார். நடிகர் இரா. சு. மனோகர் மற்றும் மனோரமா ஆகிய இருவரையும் தி. இரா. சுந்தரம் தனது 18 படங்களில் நடிக்க வத்துள்ளார், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்துள்ள எந்தவொரு நடிகர்களை விடவும் இது அதிகம். தி. இரா. சுந்தரம் அவர்கள் இரா. சு. மனோகரது ஒழுக்கம், அவரது குரல், உரையாடல் வெளிபடுத்தும்விதம் மற்றும் அவரது ஆங்கில அறிவை மிகவும் விரும்பினார். மனோகர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று,. அஞ்சல் துறையில் ஒரு எழுத்தராக பணிபுரிந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Randor Guy (21 February 2015). "Blast from the Past - Konjum Kumari 1963". "தி இந்து". பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
  2. "Konjum Kumari". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
  3. "Watch Konjum Kumari Tamil Full Movie Online HD 1963 -". tamilrasigan.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
  4. Randor Guy (8 August 2008). "Friday Review - Stickler for Discipline". "தி இந்து". பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
  5. "konjum kumari movie". gomolo. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  6. "Gaanagandharvan Dr. KJ Yesudas Tamil". ganagandharvan.weebly. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  7. "konjum kumari songs". tamiltunes. பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
  8. "report all you need to know about legendary Tamil actress manorama". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொஞ்சும்_குமரி&oldid=3847674" இலிருந்து மீள்விக்கப்பட்டது