கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Kochi Refinery Limited) (சுருக்கமாக:KRL), கேரள அரசின் பொதுத்துறை நிறுவனம் இப்பாறைநெய் தூய்விப்பாலை 27 ஏப்ரல் 1963 அன்று நிறுவியது.. இது கேரளா மாநிலத்தின் கொச்சி நகரத்திற்கு கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பலமுகல் எனுமிடத்தில் உள்ளது.. 2001ஆம் ஆண்டில் இவ்வாலையை பாரத பெட்ரோலியம் நிறுவனம் கையகப்படுத்தியது.[1]
வளர்ச்சி
[தொகு]இவ்வாலை பாறை எண்ணெய்யை ஆண்டிற்கு 15.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[2]
1963ஆம் ஆண்டுகளில் இப்பாறைநெய் தூய்விப்பாலை ஆண்டிற்கு 2.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. 1973ஆம் ஆண்டில் 3.3 மில்லியன் டன் உற்பத்தி செய்தது. ஆகஸ்டு 2010ஆம் ஆண்டு முதல் இவ்வாலை ஆண்டிற்கு 9.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இவ்வாலை 1991ஆம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களிலிருந்து 26.3 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ஆலையும், 1998ஆம் ஆண்டில் 17.8 மெகாவாட் மின்சார உற்பத்தி ஆலையும் நிறுவியது.
2003ஆம் ஆண்டில் இவ்வாலை ஆண்டிற்கு 44,000 டன் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்யும் ஆலை நிறுவியது. 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 3,78,000 டன் அசுபால்ட்டு எனும் பெட்ரோலிய வேதிப் பொருளை உற்பத்தி செய்கிறது.
உற்பத்தி பொருட்கள்
[தொகு]இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், நேப்தா, அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், எரிநெய் (fuel oil), மசகுநெய் (Lubricant Oil) செயற்கை உரங்கள், பென்சீன்., தார், மெழுகு, மற்றும் எக்சேன், நெகிழி தயாரிக்க தேவையான பாலிஎத்திலீன் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.