உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சியின் கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சியின் கலாச்சாரம் (மலையாளம்: ಕೊಚ್ಚಿ ಸಂಸ್ಕೃತಿ Culture of Kochi) என்பது, இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொச்சி துறைமுக நகரத்தின் கலாச்சாரம் தனித்துவமான கேரளத்தவர் பண்புகளைக் கொண்டு திகழ்கிறது. இங்குள்ள கலாச்சாரம் பெரும்பாலும் தென்னிந்தியப் பாணியிலானதாகவே உள்ளது. கொச்சி நகரவாசிகள் கொச்சியிட்சு என்று அழைக்கப்படுகிறார்கள்; இவர்கள் தென்னிந்தியக் கலாச்சாரப் பின்னணியின், முக்கிய அங்கமாகத் திகழ்கிறார்கள். கேரளத்தின் மிகப்பெரிய நகரமாக இருப்பதால், மாநிலத்தின் பிற பகுதிகளை விட கொச்சியின் கலாச்சாரம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.[1] வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, இந்நகரம் பல வகைகளில் பன்முகத்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இங்கு இரவு நேர வாழ்க்கை குறைவாகவே உள்ளது;[2] இரவு 10 மணிக்கு மேல் நகரம் பெரும்பாலும் அமைதியாகி விடுகிறது. இருப்பினும், பெண்களுக்கு ஏற்ற சில மதுக்கூடங்கள், இரவு நேர உணவகங்கள் இங்கு உள்ளன;[3] உதாரணமாக, அவென்யூ ரீஜென்ட்டில் உள்ள மெஸ்ஸோ (இரவு 10:45 மணி வரை சேவை), டோனிகோ கஃபே (அதிகாலை 2:00 மணி வரை இயங்கும்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த தொடர்ச்சியான குடியேற்றங்களால், கொச்சியின் கலாச்சாரம் செழுமைப்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில், கொச்சியின் வணிக மற்றும் பொருளாதாரத் தளங்களில் முக்கியப் பங்காற்றிய ஒரு பெரிய யூதச் சமூகம் இந்நகரில் இருந்தது.[4]

மலையாள இலக்கியம் வளர்ச்சிக்கு உதவிய சங்கம்புழா கிருட்டிண பிள்ளை, கேசரி பாலகிருஷ்ண பிள்ளை, ஜி. சங்கரா குறுப்பு, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் போன்றோரின் மிகவும் செல்வாக்கு மிக்க சிலரின் இருப்பிடமாக கொச்சி திகழ்ந்தது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Rakee Mohan (2006-04-08). "Developing metro and quaint environs". Economic Times. http://economictimes.indiatimes.com/markets/real-estate/cities/bangalore/Developing-metro-and-quaint-environs/articleshow/1482577.cms. பார்த்த நாள்: 2006-05-23.
  2. ↑ https://c-hed.org/kochi-night-life-zone/
  3. ↑ https://wtp.travel/travel-guides/india/cochin/night-life/
  4. ↑ "The Jews, Israel, and India". An Interview with Nathan Katz. Jerusalem Centre for public affairs. Archived from the original on 5 September 2006. Retrieved 2006-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சியின்_கலாச்சாரம்&oldid=4638156" இலிருந்து மீள்விக்கப்பட்டது