கொச்சகக் கலிப்பா
Appearance
கொச்சகக் கலிப்பா என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது கொச்சகக் கலிப்பா எனப்படும். இடம்பெறும் உறுப்புகளுக்கேற்ப தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பல வகைகள் இதில் உள்ளன.
கொச்சகக் கலிப்பா என்பது ஒரு தரவு வந்தும், இரண்டு தரவு வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளும் தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும், ஆசிரியத்தினோடும், மயங்கியும் வருவனவாகும். [1]
- எடுத்துக்காட்டு
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்
வகைகள்
[தொகு]- ஒரு தரவு வரும் கொச்சகக் கலிப்பா தரவு கொச்சகக் கலிப்பா எனப்படும்.
- இரு தரவுகள் வரும் கொச்சகக் கலிப்பா தரவிணைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.
- சில தாழிசை வரும் கொச்சகக் கலிப்பா சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.
- பல தாழிசை வரும் கொச்சகக் கலிப்பா பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.
- தம்முள் மயங்கியும், பிறவற்றினோடு மயங்கியும் வரும் கொச்சகக் கலிப்பா மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ந.மு.வேங்கடசாமி நாட்டார் (2008). யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது). சென்னை: முல்லை நிலையம். pp. 1–216.