கொசு விழிப்புணர்வு வாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிகாரப்பூர்வ பெயர்கொசு விழிப்புணர்வு வாரம்
Mosquito Awareness Week
பிற பெயர்(கள்)கொசு கட்டுப்பாடு விழிப்புணர்வு வாரம்
கடைபிடிப்போர்அமெரிக்கா மற்றும் பிற அமெரிக்க கண்ட நாடுகள்
வகைபன்னாட்டு அளவு
நாள்சூன் மூன்றாவது வாரம்
நிகழ்வுஓராண்டு
முதல் முறை2016
மூலம் தொடங்கப்பட்டதுபான் அமெரிக்க உடல்நல அமைப்பு
தொடர்புடையனகரீபியன் கொசு விழிப்புணர்வு வாரம், வழக்கமாக ஏப்ரல் அல்லது மே

கொசு விழிப்புணர்வு வாரம் (Mosquito Awareness Week) அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படும் ஒரு நடைமுறையாகும்.[1] இதை கொசு கட்டுப்பாடு விழிப்புணர்வு வாரம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு இந்நடைமுறை சூன் மாதம் 22 ஆம் நாள் முதல் சூன் மாதம் 28 ஆம் தேதிவரையில் அனுசரிக்கப்பட்டது.[2][3] முன்னதாக தனியாகவும் ஒரு கரீபியன் கொசு விழிப்புணர்வு வாரம் ஆண்டின் முற்பகுதியில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அங்கு நடைபெறுகிறது.[4]

கொசு விழிப்புணர்வு வாரம் அமெரிக்காவிலுள்ள நாடுகளால் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாரம் அனுசரிக்கப்படுகிறது.[1] டெங்கு, சிக்குன்குனியா, இசீக்கா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை இக்கொண்டாட்டம் ஏற்படுத்துகிறது. கொசுவின் இனப்பெருக்கத்தை குறைப்பதையும் இக்கொண்டாட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொசு கடித்தலைத் தவிர்ப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இத்திட்டம் மக்களை ஊக்குவிக்கிறது.[1]

வரலாறு[தொகு]

2015 – 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இசீக்கா வெடிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு கொசு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு நடைமுறை தொடங்கியது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Countries scale up mosquito control efforts for Mosquito Awareness Week - PAHO/WHO | Pan American Health Organization". www.paho.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  2. "CDC | National Center for Environmental Health | Calendar of Events". Centers for Disease Control (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. Lewis, Laura Dawn (2013-12-03) (in en). 2014 LEEP Event, Editorial & Promotional Calendar: Holidays and Observances for the US, UK, Canada, Australia & Chinese Markets. LEEP Publishing. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-311-04738-0. https://books.google.com/books/about/2014_LEEP_Event_Editorial_Promotional_Ca.html?id=bPtWAgAAQBAJ&pg=PA89. 
  4. "Caribbean Mosquito Awareness Week 2020 - PAHO/WHO | Pan American Health Organization". www.paho.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  5. "Mosquito Awareness Week 2017. Planning, control and Prevention toolkit" (PDF). Pan American Health Organization (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  6. "Mosquito Control Awareness Week: Say Goodbye to Mosquitoes at Home". Centers for Disease Control (in அமெரிக்க ஆங்கிலம்). June 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.{{cite web}}: CS1 maint: url-status (link)

புற இணைப்புகள்[தொகு]