கொசு மட்டை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொசு மட்டை அல்லது பூச்சி மட்டை என்பது கொசுக்களையும் பறக்கும் பூச்சிகளையும் கொல்லப் பயன்படும் ஒரு கருவி. இது பூப்பந்தாட்ட மட்டையைப் போன்ற தோற்றம் உடையது. மின்சாரம் பாய்ச்சிப் பூச்சிகளைக் கொல்வதற்காக, நரம்புகளுக்குப் பதிலாக உலோகக் கம்பிகளைக் கொண்டிருக்கும். பூச்சிகள் இந்த கம்பிகளைத் தொடும் போது, 1000 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ந்து பூச்சிகளைக் கொல்லும். நேர் மின்னோட்ட மின்கலன்கள் மூலம் இக்கருவி இயங்குகிறது. மற்ற கொசு விரட்டிகளைப் போல இது தீங்கிழைக்கும் வேதிப் பொருட்களை வெளியிடுவது இல்லை என்பதே இதன் சிறப்பு.