கொங்கேழ் திருத்தலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் உள்ள சிவாலயங்களுள் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற ஏழு சிவத்தலங்கள் கொங்கேழ் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.

அவை

  1. வெஞ்சமாக்கூடலூர் (கரூர் அருகில்)
  2. பசுபதீஸ்வரம் (கரூர்)
  3. கொடுமுடி
  4. திருச்செங்கோடு
  5. பவானி
  6. அவினாசி
  7. திருமுருகன்பூண்டி

மேற்கண்ட ஒவ்வொரு திருத்தலத்திற்கும் தனித்தனியே தலவரலாறுகளும், புராணக் கதைகளும் உள்ளன.இத்தலங்களில் அருள்பாலிக்கும் இறைவன் மற்றும் அம்பிகையைப் போற்றி வணங்கிப் பாடப்பட்ட பாடல்கள் தேவார, திருவாசகப் பதிகப் பாடல்களுள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட எல்லைகளுக்குள் இவ்வேழு தலங்களும் உள்ளன.ஒரே நாளில் இவ்வேழு தலங்களுக்கும் பயணித்துத் தரிசனம் மேற்கொண்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.[சான்று தேவை] முதல் தலத்திலிருந்து புறப்பட்டால் சுமாராக 130 கிலோமீட்டர் தொலைவு பயணத்தில் இத்தலங்கள் அனைத்தையும் சென்று தரிசிக்குமளவில் இவை அமைந்துள்ளன.