கொங்கு நாட்டு வனப்பகுதி
கொங்கு நாட்டின் வனங்கள் என்பது கொங்கு நாடு என்ற நிலப்பிரிவின் வனங்களைக் குறிக்கிறது. இது வரலாற்றுத் தொடக்கக் காலம் முதற்கொண்டே, தமிழ்நாட்டின் உட்பிரிவாகத் திகழ்கிறது. இந்நிலப்பிரிவு குறிஞ்சியும், முல்லையும், ஓரளவு மருதநிலமும் அடங்கிய வனபுலமாகும். இப்பகுதியின் பெரும்பகுதி முல்லையும், எல்லைப் பகுதிகளில் குறிஞ்சியும் விரவிக் காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல்
[தொகு]காவிரி பாயும் கிழக்குப்பகுதியும், பிற திசைகளில் எல்லைகளாக, இயற்கை அரண்களாகிய மலைகளும் அமைந்த இந்நாடு ஏறத்தாழ ஐங்கர வடிவமைப்பு கொண்டதாகும். கிழக்கு மலைத்தொடரின் சிதறல்கள், மேற்கு மலைத்தொடரில் நீலகிரிப் பகுதியுடன் இணைந்துள்ளது. ஆனைமலைத் தொடரும், பழனி மலைத்தொடரும் இணைந்து தெற்கு, தென்மேற்குப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், தென்மேற்கு திசைப்பகுதியில் வெள்ளியங்கிரியும், சத்தியமங்கலம் பகுதியின் தலைமலையும், தர்மபுரிப் பகுதியின் பெரும்பாலையும் அமைந்துள்ளன. வடமேற்குப் பகுதியில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, பச்சைமலை ஆகிய தொடர்களும், ஓதிமலை, குருடிமலை, ஊதியூர்மலை, சென்னிமலை, ஊராட்சிக் கோட்டை மலை, சிவன்மலை, அலைவாய் மலை, திருச்செங்கோட்டு மலை, கஞ்சமலை ஆகிய குறு மலைகளும் அடங்கியுள்ளன. காவிரியின் கிளை ஆறுகளான அமராவதியும், பவானியும், நொய்யல் ஆறும் இப்பகுதிகளில் பாய்கின்றன.
வனப்பகுதிகள்
[தொகு]- மலைமுகட்டு மழைச்சோலை
- திருப்புல அருஞ்சோலைகள்
- திருப்புலவறண்டக் காடுகள்
- திருப்புல முள்ளிப்புறவுகள்
- ஈரக்காடுகள்
- நெடுவரைக் குளிர்சோலை