கொங்கானோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொங்கானோடை இந்தியாவில் தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டச்சுக்காரர்கள் வாணிபம் புரிந்த தரங்கம்பாடி வட்டத்தில் நல்லாடை ஊராட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய கிராமம் ஆகும். இங்கு சுமார் 420 மக்கள் வசித்து வருகிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலிருந்து நெடுங்காடு வழியாக மயிலாடுதுறை அல்லது பொறையாரிலிருந்து சங்கரன்பந்தல் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் நல்லாடை என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் கொங்கானோடை அமைந்துள்ளது.

இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். காவிரி ஆற்றை நம்பியே இருப்பதால் தற்பொழுது விவசாயம் சிறப்பாக இல்லை. ஒரு போக சாகுபடியே நடந்து வருகிறது. விவசாய கூலிவேலை செய்பவர்கள் தான் அதிகம். வேலை இல்லாத நாட்களில் நூறு நாள் வேலை தான் இங்குள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 15 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கானோடை&oldid=1949695" இருந்து மீள்விக்கப்பட்டது