கொங்காடு குட்டிசங்கரன்
கொங்காடு குட்டிசங்கரன் | |
---|---|
இனம் | ஆசிய யானை |
பால் | ஆண் |
பிறப்பு | சுமார் 1962 நிலம்பூர், கேரளம் |
இறப்பு | 26 ஜூலை 2020 |
நாடு | இந்தியா |
அறியப்படுவதற்கான காரணம் | திரிச்சூர் பூரம், பிற பூரம் திருவிழாக்கள் |
உரிமையாளர் | கொங்காடு திருமந்தம்குன்னு கோயில் |
உயரம் | 3.01 m (9 அடி 11 அங்) |
கஜராஜன் கொங்காடு குட்டிசங்கரன் (Kongad Kuttisankaran) (1962கள் - 26 ஜூலை 2020) என்பது கேரளாவின் பாலக்காடு, கொங்காட்டில் வாழ்ந்த ஒரு யானையாகும்.[1] [2] கேரளாவில் 300 செமீ உயரத்திற்கு மேல் பிறந்த சில யானைகளில் இதுவும் ஒன்று.[3]
குட்டிசங்கரன், நிலம்பூர் வனப்பகுதியில் பிறந்தது.[4] மிக இளம் வயதிலேயே காட்டை விட்டு வெளியேற்றப்பட்டப் பிறகு, 1969இல் கொங்காடு திருமந்தம்குன்னு கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.[5] அத்யன் தம்புரான், இபாகுல சக்கரவர்த்தி , கஜராஜன் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளது.[6] குட்டிசங்கரன் கேரள நாட்டுப்புறக் கதைகளில் மிகவும் பிரபலமான யானைகளில் ஒன்று.[7] மதங்கசாஸ்திரத்தைச் சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த யானை 18 நகங்கள், நீளாமான தும்பிக்கை, நீண்ட வால், அழகான கண்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8]
குட்டிசங்கரன், திரிச்சூர் பூரம், நெம்மர வேளா, புதுச்சேரி வெடி, மன்னார்காட் பூரம் உள்ளிட்ட திருவிழாக்களில் வழக்கமாக இடம் பெற்றது.[9] இந்த யானை கடைசியாக மன்னார்காட் பூரத்தில் பங்கேற்றது. அதன் பிறகு வயது தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காகச் சென்றது. சில மாதங்கள் கழித்து, இது 26 பிப்ரவரி 2020 அன்று இறந்தது.[10] [11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ഹരിഗോവിന്ദന്, -വി. "നാടിന്റെ അഭിമാനമായി കോങ്ങാട് കുട്ടിശങ്കരന്". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "Kongad Kuttysankaran back to festival grounds". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ "Kogadu Kuttysankaran |കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ ചരിഞ്ഞു; ഓർമയാകുന്നത് നാട്ടാനച്ചന്തത്തിന്റെ തിടമ്പേറ്റിയ ഗജവീരൻ". malayalam.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "പ്രശസ്ത നാട്ടാന കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ ചരിഞ്ഞു | kongad kuttishankaran passed away". www.asianetnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "കരിയഴകിന്റെ കുലപതി, ആണത്തത്തിന്റെ അതുല്യ തേജസ്സ്; കണ്ണീരോർമയായി കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ, ഓർമക്കുറിപ്പ്". www.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "കോങ്ങാട് കുട്ടിശങ്കരന് ചരിഞ്ഞു | Kairali News | kairalinewsonline.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "ഗജവീരന് കോങ്ങാട് കുട്ടിശങ്കരന് ഇനി ഓർമ്മ; ചരിഞ്ഞത് ലക്ഷണമൊത്ത കൊമ്പൻ". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "ഗജരാജൻ കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ ചരിഞ്ഞു". Sathyam Online (in ஆங்கிலம்). 2020-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ ചരിഞ്ഞു | Palakkad | Kerala | Deshabhimani | Monday Jul 27, 2020". www.deshabhimani.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
- ↑ "Lack of treatment protocol for TB-hit jumbos". https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2020/aug/06/lack-of-treatment-protocol-for-tb-hit-jumbos-2179633.html.
- ↑ "പ്രശസ്ത നാട്ടാന കോങ്ങാട് കുട്ടിശങ്കരൻ ചരിഞ്ഞു". www.malayalamexpress.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.[தொடர்பிழந்த இணைப்பு]