கொக்கிளாய் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொக்கிளாய் சரணாலயம்
Kokkilai sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of கொக்கிளாய் சரணாலயம்
Map showing the location of கொக்கிளாய் சரணாலயம்
Kokkilai Sanctuary
இலங்கையின் வட மாகாணம்
அமைவிடம்வட மாகாணம் இலங்கை
கிட்டிய நகரம்முல்லைத்தீவு
ஆள்கூறுகள்09°01′25″N 80°55′55″E / 9.02361°N 80.93194°E / 9.02361; 80.93194ஆள்கூறுகள்: 09°01′25″N 80°55′55″E / 9.02361°N 80.93194°E / 9.02361; 80.93194
பரப்பளவு20 km2 (8 sq mi)
நிருவாகிஇலங்கை அரசு

கொக்கிளாய் சரணாலயம் வடகிழக்கு இலங்கையின் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோ மீற்றர் (16 மைல்) தென் கிழக்கில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

கொக்கிளாய் குளம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் பறவைகள் சரணாலயமாக 18 மே 1951 இல் இருந்து 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[1][2] 1990 ஆம் ஆண்டு இச் சரணாலயம் 2,995 ஹெக்டேயர் (7,440 ஏக்கர்) பரப்பளவை கொண்டிருந்தது.[1] தற்போது  1,995 ஹெக்டெயர் (4930 ஏக்கர்) பரப்பளவை கொண்டுள்ளது.[2]

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவை அடுத்து, வடக்கு மாகாணத்தில் கொக்கிளாய் சரணாலயம் உட்பட பல சரணாலயங்களை தேசிய பூங்காக்களாக மாற்றும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.[3][4] வட மாகாணத்தில் 2015 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் திகதி புதிய நான்கு தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் கொக்கிளாய் மட்டுமே சரணாலயம் ஆகும்.[5][6]

யுனைடட் நேஷன்ஸ் டெவலப்மன்ட் புரோகிராம் மற்றும் சுற்று சூழல் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்தின் ஒருங்கிணைந்த மூலோபாய சுற்று சூழல் மதிப்பீடு கொக்கிளாய் சரணாலயம் நெய்யரு குளத்தினை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தது.[7]

கொக்கிளாய் சரணாலயம் சட்ட விரோத காடழிப்புக்கு உட்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1000 ஏக்கர் மற்றும் 3000 பறவைகள் அழிக்கப்பட்டன.

தாவரங்கள் மற்றும் விலங்குகள்[தொகு]

கொக்கிளாய் குளம் பகுதியாக சதுப்பு நிலங்களாலும், புல் படுக்கைகளாலும் சூழப்பட்டுள்ளது.[1] இதனை சுற்றியுள்ள பகுதி பயிரிடப்பட்ட நிலம், புதர் மற்றும் திறந்த காடுகளை கொண்டது.[1] பல்வேறு வகையான பறவைகள் இச் சரணாலயத்தில் காணப்படுகின்றன. இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் பறவைகளின் புகலிடம் கொக்கிளாய் சரணாலயம் ஆகும்.[8] இச் சரணாலயத்தில் யானைகளும் காணப்படுகின்றன.[9][10]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 https://archive.org/details/iucndirectoryofs90gree
  2. 2.0 2.1 http://www.dwc.gov.lk/index.php/en/sancturies
  3. http://www.thesundayleader.lk/2010/06/01/new-wildlife-parks-in-the-north/en:The Sunday Leader
  4. https://web.archive.org/web/20160126040611/http://www.ceylontoday.lk/51-69133-news-detail-elephant-experts-predict-miserable-failure.html
  5. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_03/1920_03%20E.pdf
  6. http://www.sundaytimes.lk/150510/news/wild-north-gets-govts-helping-hand-at-last-148433.html
  7. http://203.115.26.10/ISEA_North_final.pdf
  8. http://www.sundaytimes.lk/100509/Plus/plus_10.html
  9. http://www.sundayobserver.lk/2010/05/30/mag02.asp
  10. http://archives.dailynews.lk/2010/05/12/news35.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கிளாய்_சரணாலயம்&oldid=2797401" இருந்து மீள்விக்கப்பட்டது