உள்ளடக்கத்துக்குச் செல்

கை யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gai Jatra
Children dressed up for Gai Jatra
கை யாத்திரையில் பல வண்ண உடையணிந்துள்ள சிறுவர்கள்.
கடைப்பிடிப்போர்இந்து நேவார்
வகைமதம் சார்ந்தவை, நேபாளம்
அனுசரிப்புகள்திருவிழா, நடனம், அணிவகுப்புகள்
நாள்சந்திர நாட்காட்டியின் புரட்டாசி மாதத்தின் பிரதமை திதி.
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை17ஆம் நூற்றாண்டு
மூலம் தொடங்கப்பட்டதுபிரதாப மல்லர்

கை யாத்திரை (Gai Jatra) சா பாரு எனவும் அறியப்படும் இது காத்மாண்டு சமவெளியில் முக்கியமாக நேவார் மக்களால் கொண்டாடப்படும் ஒரு நேபாளத் திருவிழா ஆகும்.[1][2] கடந்த ஆண்டில் இறந்த தங்களின் நெருங்கிய உறவினர்களை கௌரவிக்கும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பல்வேறு நகரங்களில் பசுக்களைப் போலவும், மத அடையாளங்கள் போலவும் குழந்தைகளை வேடமிடச் செய்து பல்வேறு குழுக்கள் ஏற்பாடு செய்கின்றன.

இது பொதுவாக புரட்டாசி மாதத்தில் (ஆகஸ்ட்/செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.[3] சந்திர நேபாள சமபத் நாட்காட்டியின்படி இந்த தேதி அமைக்கப்பட்டுள்ளது . மேலும், குன்லா மாதத்தின் புதுநிலவு நாளின் முதல் நாளில் வருகிறது.

தோற்றம்

[தொகு]

கிபி 1641 முதல் 1671 வரை காந்திபூரின் அரசனாக இருந்த பிரதாப் மல்லரின் ஆட்சியின்போது கை யாத்திரை தொடங்கப்பட்டது.[4] அவரது மகன் சக்ரவர்த்தேந்திர மல்லர் அகால மரணமடைந்தையடுத்து மிகுந்த வருத்தமடைந்த தனது இராணி மற்றும் தனது உறவினர்களை அத்துரயரத்திலிருந்து உற்சாகமடைய வைக்கவும் தனது மகனின் ஆன்மா அடுத்த நிலைக்குச் செல்லவும் பிரதாப் மல்லர் இந்த பாரம்பரியத்தைத் தொடங்கினார்.[5][6]

பெயர் காரணம்

[தொகு]

இந்த திருவிழா சா பாரு எனவும் அழைக்கப்படுகிறது. நேபாள பாசாவில் சா என்றால் பசு என்றும் பாரு என்றால் பிரதமை திதி என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தின் சுக்ல பட்ச பிரதமை திதியில் கொண்டாடப்படுவதாலும், குழந்தைகள் பசுக்களைப் போல வேடமிட்டு விழா கொண்டாடப்படுவதாலும் இந்தப் பண்டிகை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது நேபாள மொழியிலும் நேபாளம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் கை யாத்திரை (பசு திருவிழா) என்று பிரபலமாக அறியப்படுகிறது.[7]

கொண்டாட்டங்கள்

[தொகு]

இந்து புராணங்களின்படி மாடு (கை) புனிதமானது . மேலும் அதனை இலக்குமியாகவும் கருதப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களின் குழந்தைகள் நேபாளத்தின் மத்திய காட்மாண்டு நகரச் சதுக்கத்தில் உள்ள அனுமான் தோக்காவிற்கு வருவார்கள். அங்கு நேவார் பூசாரி இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வார். குழந்தைகள் வழக்கமாக நீண்ட பாவாடைகளை அணிவார்கள். மேலும் அவர்கள் இடுப்பைச் சுற்றி ஒரு கயிறை கட்டிக் கொள்வர். அதன் முனைகள் வலது மற்றும் இடது பக்கங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும். மேலும் அதன் முனைகள் தரையத் தொட வேண்டும். பூமியில் இறந்தவர் சொர்கத்திற்குச் செல்ல இது உதவுவதாக நம்புகின்றனர். குழந்தைகள் முக்கியமான பசுவின் படம் வரையப்பட்ட தலைக்கவசங்களையும் அணிகிறார்கள். நேவார் சமூகத்தினர் தங்கள் அன்புக்குரியவர்கள் பூமியிலிருந்து சொர்க்கத்திற்குச் செல்லவும், பின்தங்கியவர்களை உற்சாகப்படுத்தவும் உதவும் வகையில் இந்த யாத்திரை மத ரீதியாக நடத்தப்படுகிறது.

கொண்டாட்டங்கள் 1600களில் இருந்து, கேலிச்சித்திரங்களும் நகைச்சுவைகளும் உருவாகி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதை மேலும் சுவாரசியமாக்க அரசியல் நையாண்டிகளையும் உள்ளடக்கியுள்ளன. பொதுவாக ஆண் நகைச்சுவை நடிகர்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து நாடகத்தின் ஆண் மற்றும் பெண் பாகங்களை நிகழ்த்துகிறார்கள். இது நேவார் சமூகத்திற்கும் மற்ற அனைத்து நேபாள சமூகங்களுக்கும் ஒரு வேடிக்கையான நிகழ்வாகும்..[8]

காத்மாண்டு சம்வெளியிலுள்ள காத்மாண்டு, இலலித்பூர் மற்றும் பக்தபூர் ஆகிய நகரங்களில் கை ஜாத்ரா முக்கியமாக கொண்டாடப்படுகிறது.[9] இந்த திருவிழாவின் கொண்டாட்டம் குறிப்பிடத்தக்க நேவார் சமூகத்தைக் கொண்ட நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gai Jatra Festival
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Chettri, Prabhakar. "Festivals of Nepal: Gai Jatra". nepalhomepage.com. Archived from the original on 2008-05-09.
  2. Setopati, सेतोपाटी. "गाईजात्रा सुरु". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-01.
  3. Setopati, सेतोपाटी. "गाईजात्रा सुरु". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-01.
  4. "गाईजात्रा कहाँ, किन र कसरी मनाइन्छ?". BBC News नेपाली (in நேபாளி). 2021-07-19. Retrieved 2022-09-01.
  5. "Devotees celebrate Gai Jatra in Kathmandu for the salvation of departed souls". ANI News (in ஆங்கிலம்). 2021-08-23. Archived from the original on 2021-08-23. Retrieved 2022-08-07.
  6. "Gaijatra being observed in Kathmandu Valley". kathmandupost.com (in English). Retrieved 2022-09-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "'सा पारु' अर्थात् गाईजात्रा". 'सा पारु' अर्थात् गाईजात्रा (in ஆங்கிலம்). Retrieved 2022-09-01.
  8. "गाईजात्रा : मृत्यु शोकको अनौठो उत्सव". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-01.
  9. Khaiju, Ishwor Kaji (2020-07-19). "Gai Jatra in Bhaktapur to be marked without iconic dances". The Annapurna Express (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-20. Retrieved 2022-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_யாத்திரை&oldid=4222699" இலிருந்து மீள்விக்கப்பட்டது