கை டக் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை டக் வானூர்தி நிலையம்
Kai Tak Airport

IATA: HKGICAO: VHHH
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது, பயன்பாட்டில் இல்லை
இயக்குனர் Civil Aviation Department
சேவை புரிவது ஹொங்கொங்
அமைவிடம் கவலூன் குடா, ஹொங்கொங்
உயரம் AMSL 9 மீ / 28 அடி
ஆள்கூறுகள் 22°19′43″N 114°11′39″E / 22.32861°N 114.19417°E / 22.32861; 114.19417
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
13/31 (மூடப்பட்டது) 3,390 11,122 கற்பாதை

ஹொங்கொங் கை டக் வானூர்தி நிலையம் அல்லது ஹொங்கொங் கை டக் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hong Kong Kai Tak International Airport) 1925 ஆம் ஆண்டு முதல் 1998 யூலை 6 ஆம் நாள் வரை இயங்கி வந்த வானூர்தி நிலையமாகும். தற்போது இது பயன்பாட்டில் இல்லாத வானூர்தி நிலையமாகும்.

வானூர்தி நிலைய இடமாற்றத்திற்கான காரணங்கள்[தொகு]

இவ்விமான நிலையம் ஹொங்கொங் தீவில் இருந்து சில மைகளுக்கு அப்பால் கவுலூன் குடா எனும் குடா கடலோடு இணைந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தது. அவ்வானூர்தி நிலையம் மலைகளும் மாடிமனைகளும் சூழ அமைந்திருந்தது மத்தியில் ஒரு பல்லத்தாக்கு போன்ற கடலும் அதனை அண்டிய நிலப்பரப்புமாக அமைந்திருந்தது. இதனால் வானூர்தி தரையிறக்கம் தொடர் ஆபத்துக்களுக்கு உள்ளாகின. பல வானூர்தி விபத்துக்களும் ஏற்பட்டன. ஒரு முறை வானூர்தி ஓடு பாதையிலிருந்து தடம்மாறி கடலிலும் வீழ்ந்தது. உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. பலர் படுகாயமுற்றனர். இவ்வாறு பாதுகாப்பு அற்ற ஒரு இடத்திலேயே இந்த விமான நிலையம் அமைந்திருந்து. இதனால் கவ்லூண் பே யையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் உயர்ந்த கட்டிடங்களை எழுப்ப முடியாத ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.

இன்னொருபுறம் ஹொங்கொங் நாட்டின் படுவேகமான பொருளாதார வளர்ச்சி, பன்னாட்டு வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை ஹொங்கொங்கில் அதிகரித்தது. இப்பயணிகளுக்கான முழுமையான சேவையை வழங்க முடியாத இடப்பற்றாக்குறையும் போதிய வசதியின்மையும் இவ்விமான நிலையத்தில் காணப்பட்டன. குறிப்பாக பொதிகள் ஏற்றி இறக்குவதற்கான வசதிகளும் போதுமானதாக இருக்கவில்லை. வானூர்தி ஓடுபாதையும் ஒன்று தான் இருந்தது. எனவே ஹொங்கொங்கிற்கு இடவசதி கூடியதும் நவீன வசதிகள் நிறைந்ததுமான ஒரு வானூர்தி நிலையத்தின் தேவையை தோற்றுவிக்கவே இவ்விமான நிலையம் செக் லப் கொக் தீவை புணர்நிர்மானம் செய்து அமைக்கப்பட்ட வானூர்தி நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதாவது 1998 யூலை 6 ஆம் நாள் செக் லப் கொக் பன்னாட்டு வானூர்தி சேவை ஆரம்பமானதைத் தொடர்ந்து இவ்வானூர்தி நிலையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தற்போது வானூர்திநிலையம் இருந்த இடம்[தொகு]

தற்போது இவ்வானூர்தி நிலையம் இருந்த இடம் விக்டோரியா துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_டக்_வானூர்தி_நிலையம்&oldid=1830393" இலிருந்து மீள்விக்கப்பட்டது