கைவில்லையின் முக்கியத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைவில்லையின் முக்கியத்துவம்[தொகு]

  நம்மைச் சூழ்ந்துள்ள உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் நாம் உணருவதும், காண்பதும் மிகவும் சிக்கலான ஒரு செயலாகும். அப்பொருளை உண்டாக்கும் பருப்பொருளோடு (matter)மின்காந்தக் கதிர்கள் மேற்கொள்ளும் இடைச்செயல்களோடு இச்சி்க்கல் ஆரம்பமாகிறது.இந்த இடைச்செயல்களால் மாறுபாடுறும் மின்காந்தக் கதிர்கள் (குறிப்பாக ஒளிக்கதிர்கள்) நம்முடைய கண்களின் வில்லையால் (lens) சேகரிக்கப்பட்டு பின்பு கண்களின் விழித்திரையில் (retina) குவிக்கப்படுகின்றன. விழித்திரையின் நரம்புத் தொகுதி விழித்திரையில் விழும் பிம்பம்த்தை நம்முடைய மூளையின் உதவியோடு இனங்கண்டறிந்துகொள்கிறது. இவ்வாறு, நம்முடைய கண் ஒரு பொருளை அதனுடைய முப்பருமான நிலையில் உணர்ந்துகொள்கிறது.
  நுண்ணறிவும், பயிற்சியும் பெற்ற கண்களுக்கு உதவியாக உருவங்களைப் பெரிதாக்கும் ஒரு வில்லையைப் பயன்படுத்தினால் ஒரு பொருளின் அமைப்பு பற்றி நமக்கு கிமைக்கும் விவரங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. எனவே, ஒவ்வொரு உயிரியல் மாணவரும் வைத்திருக்க வேண்டிய முக்கியத் தேவைப்பொருள் ஒரு நல்ல கைவில்லை (hand lens) ஆகும். எந்த ஒரு ஆய்வைத் தொடங்கும் போதும் இந்த கைவில்லையைப் பயன்படுத்த வேண்டும். கண்ணுக்கு அருகாமையில் கைவில்லையை வைத்து ஆய்வு செய்ய வேண்டிய பொருள் குவியம்த்திற்கு (focus) வரும் வரை வில்லையை நோக்கி நகர்த்திக்கொண்டே வரவேண்டும். இந்த கைவில்லைகள் 6 முதல் 15 மடங்குவரை உருவத்தைப் பெரிதாக்கும் பண்பு பெற்றிருப்பதால் கள ஆய்வுக்கும் சோதனைச்சாலையில் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட ஆய்வுக்கும் உகந்தன.

மேற்கோள்கள்[தொகு]

ஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.

மேலும் படிக்க[தொகு]

https://en.wikipedia.org/wiki/Magnifying_glass