உள்ளடக்கத்துக்குச் செல்

கைவிலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயாட்டு வகை 2010 கைவிலங்குகள். அண். 1990s .
ஒரு நபரின் முதுகுக்குப் பின்னால் கைவிலங்கு போடப்பட்டுள்ளது.

கைவிலங்கு (Handcuffs) என்பது ஒரு நபரின் மணிக்கட்டுகளை இயக்காதவகையில் வடிவமைக்கப்பட்டக் கட்டுப்பாட்டுச் சாதனமாகும்.[1] இவை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன, இவை ஒரு சங்கிலி, ஒரு கீல் அல்லது கடினமான பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றுப்பட்டையிலும் ஒரு நழுவுதிருகி உள்ளது, இது ஒரு நபரின் மணிக்கட்டைச் சுற்றி மூடியவுடன் திறக்கப்படுவதைத் தடுக்கிறது. சாவி இல்லாமலோ கைவிலங்குகளை அகற்றுவதற்கான நிபுணத்துவமில்லாமலோ கைவிலங்குகளை அகற்ற இயலாது, மேலும் கைவிலங்கிடப்பட்ட நபர் ஒரு சில அங்குலங்களுக்கு மேல் தங்களது மணிக்கட்டை நகர்த்த முடியாது, இதனால் பல பணிகளைக் கடினமாக அல்லது சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் காவல்துறையின் காவலில் இருந்து தப்பிப்பதைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க முகமையால் கைவிலங்குகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பாணிகள்

[தொகு]

உலோகக் கைவிலங்குகள்

[தொகு]
டச்சுக் காவல்துறையால் பயன்படுத்தப்படும் கீல் கைவிலங்குகள்

சமகால உலோகக் கைவிலங்குகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன: சங்கிலி (ஒரு குறுகியச் சங்கிலியால் ஒன்றாகப் பிடிக்கப்படுகிற கைவிலங்குகள்), கீல் (கீல் கட்டப்பட்ட கைவிலங்குகள் சங்கிலி சுற்றுப்பட்டையை விட குறைவான இயக்கத்தை அனுமதிப்பதால், இவை பரவலாக மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன), திடமானப் பட்டைக் கைவிலங்குகள். இயாத்து இசுபீட்கப்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பெரும்பாலான காவல்துறைப் படைகளால் பயன்படுத்தப்படும் கடினமான கைவிலங்குகள் ஆகும்.

1933 ஆம் ஆண்டில் ராயல் கனடியன் மவுண்டட் காவல் அதிகாரிகளின் துப்பாக்கி போன்ற பொருளை குற்றவாளிகள் கைப்பற்றுவதைத் தடுக்க "மிட்டன் ஹேண்ட்கஃப்ஸ்" என்ற வகையைப் பயன்படுத்தியது. சட்ட அமலாக்கத்தில் சிலரால் பயன்படுத்தப்பட்டாலும் இது பிரபலமாகவில்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1.   "Fetters and Handcuffs". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 10. (1911). Cambridge University Press. 
  2. "Mitten Handcuffs Secure Criminal", October 1933, Popular Science middle of page 27, right side

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவிலங்கு&oldid=4186663" இலிருந்து மீள்விக்கப்பட்டது