உள்ளடக்கத்துக்குச் செல்

கைலாசகோனா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைலாசகோனா அருவி (Kailasakona Falls) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் நாராயணவனம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. அருவிக்கு அருகில் சிவன் மற்றும் பார்வதி கோவில் உள்ளது. அருவி சுமார் 40 அடி உயரம் கொண்டதாகும்.[1] மலைப்பகுதிகளிலும் மூலிகைப்பகுதி வழியாகவும் தவழ்ந்து வருவதால் அருவி மருத்துவகுணம் நிறைந்ததாக இருக்கிறது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும். இங்கு 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிவன் மற்றும் பார்வதி கோயிலுக்கு அருகில் உள்ள பிரதான நீர்வீழ்ச்சியைத் தவிர, நீர்வீழ்ச்சிக்கு வரும் பிரதான சாலையின் பாதியில் சுமார் 4 முதல் 6 அடி உயரம் கொண்ட இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த இரண்டு அருவிகளுக்கும் நடைபாதை சாலைகள் இல்லை.

எப்படி அடைவது

[தொகு]
  • கைலாசகோனா அருவி ஊத்துக்கோட்டை - புத்தூர் - திருப்பதி சாலையில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியை காரில் எளிதாக அடையலாம்.
  • கடப்பா-சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் 40 கிமீ தொலைவில் இந்த அருவி அமைந்திருக்கிறது.
  • திருப்பதியிலிருந்து கைலாசகோணம் வரை 44 கி.மீ ஆகும்.

புற இணைப்புகள்

[தொகு]
  1. "Kailasanatha Kona Tirupati, India | Best Time To Visit Kailasanatha Kona". www.tourtravelworld.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசகோனா_அருவி&oldid=3847189" இலிருந்து மீள்விக்கப்பட்டது