கைலாசகிரி பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைலாசகிரி பூங்கா என்பது இந்திய நாட்டில் ஆந்திரபிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மலைப் பூங்கா[1] ஆகும். இந்த பூங்கா விசாகபட்டினம் நகர வளர்ச்சி துறையினரால்[2] திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒன்று.இது 380 ஏக்கர் (150 ஹெக்) பரப்பளவில் வெப்பமண்டல காடுகள் சூழ்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலை 360 அடி உயரத்தில் (110 மீ) அமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து நோக்குகையில் கடற்கரைகள்,காடுகள், விசாகப்பட்டின நகரம் அனைத்தும் தெரியும். ஆந்திரப்பிரதேச அரசு 2003ம் ஆண்டு கைலாசகிரிக்கு சிறந்த சுற்றுலா மையம் என்ற பரிசு வழங்கி சிறப்பித்தது. ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ மூன்று இலட்சம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகிறார்கள். விசாகபட்டினம் நகர வளர்ச்சி துறை சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சுற்றுளா தளத்தை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத இடமாக அறிவித்துள்ளது.

கண்ணோட்டம்[தொகு]

கைலாசகிரி மலைப்பூங்கா அதன் அழகான பார்வைக்காகவும்,அமைதியான சூழலுக்காகவும், மற்றும் கண்ணுக்கினிய அழகிற்காகவும் அறியப்பட்டது.விசாகப்பட்டினத்திற்கு இந்த அழகு தான் சுற்றுலா பயணிகளை அழைத்து வருகிறது.இந்த இடம் அதிகமான பொழுது போக்கு செயல்பாடுகளை அளிப்பதால் தான் இந்த இடத்திற்கு பயணிகள் வருகிறார்கள். சிறு குழந்தைகள் விளையாட வட்ட இரயில் உள்ளது. அது வேடிக்கையையும் , மகிழ்ச்சியையும் கொடுக்கும்.மேலும் சாகச விளையாட்டுகளும் உள்ளது. இது வருபவர்கள் அனைவரையும் பரவசப்படுத்துகிறது.மேலும் இந்த இடத்தில் பெரிய சிவன் சிலையும் பார்வதி சிலையும் உள்ளது. இது இந்த இடத்திற்கு ஒரு சமயச்சுவையை கொடுக்கிறது. இதன் மலை உச்சி கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

உந்துவண்டிகள் தங்கு நிற்குமிடம்[தொகு]

உந்துவண்டிகள் தங்கு நிற்குமிடம் வசதிகள் உள்ளது. பெரிய வாகனங்களுக்கு ரூ.70/- சிறிய வாகனங்களுக்கு ரூ.50/-

வழி[தொகு]

கைலாசகிரியை அடைவதற்கு சாலையே மிகவும் சிறந்த வழி.சிலர் வாடகை உந்துகள் பிடித்து வருகிறார்கள்.மலையின் உச்சியை அடைவதற்கு சாலை வழியாகவும், இழுவை ஊர்தி மூலமும் செல்ல முடியும்.சாலையே சிறந்தது.

சமய முக்கியத்துவம்[தொகு]

இந்த மலைப்பூங்காவில் கடவுள் சிவா,பார்வதி சிலைகள் மிகவும் கவனம் ஈர்ப்பதாக உள்ளது. இந்த சிலை மலையில் இருந்து 40அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலரால் ஆன கடிகாரம் 10 அடி விட்டம் கொண்டது. இந்தியாவிலேயே பெரியது.இது அனைத்து சுற்றுலா பயணிகளையும் வரவழைப்பதற்கு ஒரு மைல்கல்லாக உள்ளது.

பொம்மை இரயில்[தொகு]

இது மிகவும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உள்ளது.பெரியவர்களுக்கு நாற்பது ரூபாயும், சிறியவர்களுக்கு முப்பது ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் செல்லும் பட்ச்சத்தில் மொத்த கைலாசகிரி[1] மற்றும் வங்காள விரிகுடாவையும் பார்த்து ரசிக்கலாம்.

பாலிவுட் புகழ்[தொகு]

கண்ணுக்கினிய அழகாகவும், அருமையான இடமாகவும் இருப்பதால் பாலிவுட் சினிமாக்கள் இங்கு எடுக்கப்படுகின்றன. அதில் வங்காள விரிகுடாவின் அழகையும், கைலாசகிரியின் அழகையும் ரசிக்கலாம்.

குறிப்புகள்[தொகு]

நீங்கள் இங்கு வான்குடை பறக்க முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் இங்கு 40 அடி உயர சிவன், பார்வதி சிலை முக்கியத்துவம் வாய்ந்தது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.holidify.com/places/visakhapatnam/kailasagiri-sightseeing-3910.html
  2. https://en.wikipedia.org/wiki/Visakhapatnam_Urban_Development_Authority
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசகிரி_பூங்கா&oldid=2917038" இருந்து மீள்விக்கப்பட்டது