கைரோஸ் (புதினம்)
நூலாசிரியர் | ஜென்னி எர்பின்பெக் |
---|---|
உண்மையான தலைப்பு | Kairos |
மொழிபெயர்ப்பாளர் | மைக்கல் ஹாஃப்மன் |
வெளியீட்டாளர் | பெங்குயின் வெர்லாக் |
வெளியிடப்பட்ட நாள் | 2021 |
ஆங்கில வெளியீடு | 2023 |
கைரோஸ் (Kairos) என்பது ஜெர்மன் எழுத்தாளர் ஜென்னி எர்பின்பெக் (கிழக்கு பெர்லின், 1967) 2021 ஆண்டு எழுதிய புதினமாகும்.
இந்த புதினம் 2022 இல் ஜெர்மனியின் உவே ஜான்சன் பரிசைப் பெற்றது.[1]இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மைக்கேல் ஹோஃப்மேனால் செய்யப்பட்டு அமெரிக்காவில் நியூ டைரக்சன் மற்றும் இங்கிலாந்தில் கிராண்டா புக்ஸ் முலம் வெளியிடப்பட்டது, இது 2023 ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான அமெரிக்க தேசிய புத்தக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[2] மேலும் 2024 ஆண்டுக்கான பன்னாட்டு புக்கர் பரிசைப் பெற்றது.[3][4]
இந்த புதினமானது கிழக்கு ஜெர்மனியின் சரிவின் பின்னணியில் வயது இடைவெளி மிக்க காதலர்களின் கதையைச் சொல்கிறது. மேற்கு ஜெர்மனியுடன் கிழக்கு ஜெர்மனி இணைவதில் காதலர்கள் இடையில் தலைமுறை இடைவெளியால் மாறுபட்ட கருத்து உள்ளது.
இந்தப் புதினம் குறித்து குறிப்பிட்ட புக்கர் பரிசுக் குழு காலம், தனிமனிதத் தெரிவுகள், வரலாற்றுச் சக்திகள் ஆகியவற்றை 'கைரோஸ்' ஒரு தத்துவார்த்த நோக்கில் ஆய்வுசெய்கிறது என்று குறிப்பிடுகிறது.[5]
ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் ஜெர்மன் எழுத்தாளர் எர்பின்பெக் ஆவார்.[6] இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட சிறந்த புனைகதை படைப்பின் ஆசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. அதேபோல், இந்த விருதைப் பெற்ற முதல் ஆண் மொழிபெயர்ப்பாளர் ஹோஃப்மேன் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akademiemitglied Jenny Erpenbeck erhält Uwe-Johnson-Literaturpreis 2022 : Akademie der Wissenschaften und der Literatur". Mainz (in ஜெர்மன்). 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
- ↑ "National Book Awards 2023". 2023. பார்க்கப்பட்ட நாள் 22 May 2024.
- ↑ Creamer.
- ↑ "Jenny Erpenbeck: Winner of the International Booker Prize 2024 | The Booker Prizes". thebookerprizes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
- ↑ "புக்கர் பரிசு: கைரோஸ் - இணைந்த ஜெர்மனி, இணையாத இதயங்கள்". 2024-05-26.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "The International Booker Prize and its history | The Booker Prizes". thebookerprizes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-06.