கைரி சமாலுதீன்
கைரி சமாலுதீன் Khairy Jamaluddin | |
|---|---|
கைரி சமாலுதீன் (2026) | |
| 13-ஆவது அம்னோ இளைஞர் தலைவர் | |
| பதவியில் 26 மார்ச் 2008 – 24 சூன் 2018 | |
| முன்னையவர் | இசாமுடின் உசேன் |
| பின்னவர் | அசிராப் வாஜிடி துசுக்கி |
| ரெம்பாவ் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 8 மார்ச் 2008 – 19 நவம்பர் 2022 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | |
| அமைச்சர் பதவிகள் | |
| 2013–2018 | இளைஞர் விளையாட்டுத்துறை |
| 2020–2021 | அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்கம் |
| 2021 | கோவிட்-19 தடுப்பூசி திட்ட அமைச்சர் |
| 2021–2022 | மலேசிய சுகாதார அமைச்சர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Khairy Jamaluddin Abu Bakar 10 சனவரி 1976 குவைத் நகரம், குவைத்து |
| குடியுரிமை | மலேசியர் |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | நோரி அப்துல்லா (தி. 2001) |
| உறவுகள் | அப்துல்லா அகமது படாவி (மாமனார்) |
| பிள்ளைகள் | 3 |
| பெற்றோர் | Jamaluddin Abu Bakar (father); Rahmah Abdul Hamid (mother) |
| கல்வி | தென்கிழக்கு ஆசிய பன்னாட்டுக் கல்லூரி |
| முன்னாள் மாணவர் | செயின்ட் இயூஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு; இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
| பணி | அரசியல்வாதி; வானொலி தொகுப்பாளர் |
| தொழில் | பத்திரிக்கையாளர் |
| கையெழுத்து | |
| புனைப்பெயர்(கள்) | KJ, Mat Bangla[1][2][3][4][5] |
கைரி சமாலுதீன் (ஆங்கிலம்; மலாய்: Khairy Jamaluddin; Khairy Jamaluddin Abu Bakar) (பிறப்பு: 10 சனவரி 1976)[6] என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; பத்திரிக்கையாளர், வானொலி தொகுப்பாளர்; பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் நிர்வாகத்தின் கீழ், ஆகத்து 2021 முதல் நவம்பர் 2022 வரை சுகாதார அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு என்று அழைக்கப்படும் அம்னோவின் (UMNO) உறுப்பினரான இவர், 2008 முதல் 2022 வரை ரெம்பாவ் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2008 முதல் 2018 வரை அம்னோ கட்சியின் இளைஞர் பிரிவிற்கும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பிரதமர் நஜீப் ரசாக்கின் கீழ் 2013 முதல் 2018 வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
பொது
[தொகு]2020 மலேசிய அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தில் இணைந்தார். 2020 முதல் 2021 வரை பிரதமர் முகிதீன் யாசின் நிர்வாகத்தின் கீழ் அவர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையின் அமைச்சரானார். 2022 மலேசியப் பொதுத் தேர்தலில், பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் கோட்டையான சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகள் வேறுபாட்டில் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அவரின் பெரும்பான்மை வாக்குகள் 26,634-இல் இருந்து 2,693 ஆகக் குறைந்தது.
வாழ்க்கை
[தொகு]கைரி ஜமாலுதீன் அபு பக்கர் குவைத்து குவைத் நகரில் பிறந்தார்.[7] அவரின் தந்தை மினாங்கபாவு வம்சாவளியைச் சேர்ந்த டத்தோ சமாலுதீன் பின் அபு பக்கார்[8] தொண்டை புற்றுநோயால் இறந்தார். தாயார் கெடா வம்சாவளியைச் சேர்ந்த டத்தின் ரகுமா பிந்தி அப்துல் அமிட். இவர் ஓர் இல்லத்தரசியாக இருந்தபோதிலும், தன் வாழ்நாள் முழுவதும் தன்னார்வப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
கைரி சமாலுதீன் தமது இடைநிலைக் கல்வியை சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்கு ஆசிய பன்னாட்டுக் கல்லூரியில் பெற்றார்.[9] பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமது உயர்க் கல்வியைத் தொடர்ந்தார். ஆக்சுபோர்டில் இருந்தபோது, செயின்ட் இயூஸ் கல்லூரியில் பயின்றார். மேலும் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[10] 1998-ஆம் ஆண்டில், அவர் சட்டம் மற்றும் அரசியல் துறையில் தமது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[11]
பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பிறகு, கைரி சமாலுதீன் சிறிது காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.[12] அதன்பிறகு, கைரி அப்போதைய மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அப்துல்லா அகமது படாவியின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியானார்; அதாவது 2003 முதல் 2004 வரை அப்துல்லா அகமது படாவியின் துணை முதன்மை தனிச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.[13]
அரசியல் வாழ்க்கை
[தொகு]

தமது மாமனாரும் பிரதமருமான அப்துல்லா அகமது படாவியின் பதவிக் காலத்தில் (2003–2009), கைரி சமாலுதீன், அம்னோ கட்சியிலும் மலேசிய அரசியலிலும் நன்கு அறியப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் அம்னோவின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவரானார்; மற்றும் அப்துல்லா அகமது படாவியின் தனிப்பட்ட செயலராகவும்[14] பதவி உயர்வு பெற்றார்.
2008 மலேசியப் பொதுத் தேர்தலில், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ரெம்பாவ் மக்களவைத் தொகுதியில் இருந்து கைரி சமாலுதீன், மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு அவர் கிர் தோயோ மற்றும் முக்ரிஸ் மகாதீரைத் தோற்கடித்து அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் தமது முதல் பதவிக்காலத்தில், சர்ச்சைக்குரிய கொள்கை விவாதங்களில் கைரி சமாலுதீன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இராணுவ வாழ்க்கை
[தொகு]2010-ஆம் ஆண்டு மே மாதம், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் ஒரு மாத அடிப்படை இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் பிறகு மலேசிய வத்தானியா பாதுகாப்புப் படை எனும் இராணுவ சேமப் படையில் ஒரு தன்னார்வலராகச் சேர்ந்தார்.[15] பின்னர் அவர் பிப்ரவரி 2011-இல் வான்குடை பயிற்சி பெறுவதற்காக இராணுவத்தின் சிறப்புப் போர் மையத்தால் நடத்தப்பட்ட ஐந்து வார அடிப்படை வான்குடை பயிற்சியையும் முடித்தார்.[16]
சனவரி 2014-இல், நெகிரி செம்பிலான் ராசாவில் அமைந்துள்ள 508 பிராந்திய இராணுவப் பிரிவின் (508 Territorial Army Regiment) தளபதியாக நியமிக்கப்பட்டார். 26 அக்டோபர் 2016 அன்று, அவர் 'கர்னல்' பதவியிலிருந்து 'பிரிகேடியர் ஜெனரல்' பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.[17] பிராந்திய இராணுவத்தால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு, சேமப் படை இராணுவ அதிகாரி தகுதியைப் பெற்ற முதல் மலேசிய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், 2018-இல் தமது பதவி விலகல் வரை, அவர் 508-வது பிராந்திய இராணுவப் படைப்பிரிவை தொடர்ந்து வழிநடத்தி வந்தார்.[18][19]
சர்ச்சைகள்
[தொகு]மலேசியப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் மகாதீர் முகமது கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.[20] செப்டம்பர் 2008 இல், மகாதீர் முகமதுவின் அந்தக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாகவும், மாணவர்களுக்குச் சுமையை மட்டுமே ஏற்படுத்தியதாகவும் கூறி, கொள்கையைத் திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்தார்.[21] மலேசிய தேர்தல் ஆணையத்தின் வெளிப் படைத்தன்மை குறித்து அம்பிகா சீனிவாசன் உட்பட அரசு சாரா மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் அவர் பொதுவில் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டார்;[22] மற்றும் மூத்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவர்களின் நெருங்கிய நண்பருமான ராபிசி ராம்லியுடன் உயர்க்கல்வி கடன்கள் குறித்தும் விவாதங்களில் ஈடுபட்டார்.[23]
அமைச்சர் பதவிகள்
[தொகு]

2013 மலேசியப் பொதுத் தேர்தலில் கைரி சமாலுதீன், தமது ரெம்பாவ் மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். அதன் பிறகு, பிரதமர் நஜீப் ரசாக், கைரியை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமித்தார்.[24] பாரிசான் நேசனல் மத்திய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 2018 மலேசியப் பொதுத் தேர்தல் முடிவுகளின் காரணமாக, கைரி சமாலுதீன் தமது ரெம்பாவ் மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், தமது அமைச்சரவை பதவியை இழக்க நேரிட்டது.[25][26]
2020 மார்ச் மாதம், பெரிக்காத்தான் நேசனல் (PN) தலைமையிலான புதிய பிரதமர் முகிதீன் யாசின் நிர்வாகத்தின் கீழ், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக பணியாற்றுவதற்கு, கைரி சமாலுதீன் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பினார்.[27][28]
2022 மலேசியப் பொதுத் தேர்தலில்; சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட அம்னோ கட்சித் தலைவர்களால் கைரி சமாலுதீன் சுங்கை பூலோவிற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தேர்தலில் கெடிலான் வேட்பாளர் ரமணன் ராமகிருஷ்ணனிடம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் கைரி சமாலுதீன் தோல்வி அடைந்தார்.[29][30]
2022 மலேசியப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, கைரியும் அம்னோ தலைவர்கள் பலரும்; அம்னோ கட்சித் தலைவரும், துணைப் பிரதமருமான அகமத் சாகித் அமிடி பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.[31] 2023 சனவரி 27 அன்று, அம்னோ உச்ச மன்றத்தால் கைரி சமாலுதீன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[32] 2026 மார்ச் 15 அன்று, அம்னோ அமைப்பில் மீண்டும் இணைவதற்கான தனது மேல்முறையீட்டுக் கடிதத்தை, அம்னோ அமைப்பின் தலைவர் அகமத் சாகித் அமிடியிடம் சமர்ப்பித்தார். 2026 ஏப்ரல் 17 அன்று, கைரியின் மறுவருகையை அம்னோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.[33][34]
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2008 | P131 ரெம்பாவ் | கைரி சமாலுதீன் (அம்னோ) | 26,525 | 55.47% | பட்ருல் இசாம் சாரின் (பிகேஆர்) | 20,779 | 43.46% | 48,901 | 5,746 | 77.75% | ||
| 2013 | கைரி சமாலுதீன் (அம்னோ) | 43,053 | 63.01% | ரட்சாலி கனி (பிகேஆர்) | 24,696 | 36.15% | 69,538 | 18,357 | 87.29% | |||
| அப்துல் அசீசு அசன் (சுயேச்சை) | 325 | 0.48% | ||||||||||
| 2018 | கைரி சமாலுதீன் (அம்னோ) | 36,096 | 48.87% | ரோசுலி அப்துல் கனி (பிகேஆர்) | 31,732 | 42.96% | 73,856 | 4,368 | 83.58% | |||
| முசுதபா டோலா (பாஸ்) | 6,028 | 8.16% | ||||||||||
| 2022 | P107 சுங்கை பூலோ | கைரி சமாலுதீன் (அம்னோ) | 48,250 | 37.22% | ரமணன் ராமகிருஷ்ணன் (பிகேஆர்) | 50,943 | 39.30% | 129,639 | 2,693 | 82.00% | ||
| கசாலி அமின் (பாஸ்) | 29,060 | 22.42% | ||||||||||
| முகமட் அக்மால் யூசோப் (பெஜுவாங்) | 829 | 0.64% | ||||||||||
| அகமட் சுப்லிசு பைசா (மமக) | 279 | 0.22% | ||||||||||
| சையட் ரசாக் அல்சகோப் (சுயேச்சை) | 165 | 0.13% | ||||||||||
| நூர்கசலிண்டா பசுரி (சுயேச்சை) | 113 | 0.09% | ||||||||||
மலேசிய விருதுகள்
[தொகு]
மலேசியா
- பொது சேவை பதக்கம் (PPA)
- 15-ஆவது மலேசிய அரசர் விருது (2017)
மலேசிய பாதுகாப்பு படைகள்
- உயரிய இராணுவ சேவைக்கான வீரர் விருது (PAT) (2016)[37]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ KJ @ Ahmad Khairy Jamal Udeen Chowdhury
- ↑ KJ Cuba Jadi “Mat Bangla” Sapu Sampah, Dikenali Dengan Nama Ahmad Khairy Jamal Udeen Chowdhury
- ↑ Demi Tingkat Kesedaran, KJ Sanggup Jadi ‘Mat Bangla’
- ↑ How an international education helped Khairy Jamaluddin become Malaysia’s Health Minister
- ↑ Identifying the Characteristics of Khairy Jamaluddin as a Leader by Using the Social Media Throughout the 29th SEA Games
- ↑ "KenaliKJ". Khairy Jamaluddin (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 October 2023. Retrieved 2023-10-26.
- ↑ "KJ chronicles: Revisiting his career and many hats". 4 February 2023. https://www.malaysiakini.com/news/653943.
- ↑ "The return of the tainted ambassador?". 2 April 2006. https://www.malaysiakini.com/letters/80776.
- ↑ "Welcome Back Abah! – Netizen Menyokong Penuh Pelantikan KJ Dalam Kabinet. Ada Yang Tiba-Tiba Minat Sains Ke Tu? Hehehe". 11 March 2020. https://gempak.com/berita-terkini/welcome-back-abah-netizen-menyokong-penuh-pelantikan-kj-dalam-kabinet-ada-yang-tibatiba-minat-sains-ke-tu-hehehe-33368.
- ↑ "KHAIRY JAMALUDDIN ABU BAKAR". 18 November 2022. https://stgpru.sinarharian.com.my/calon/286/khairy-jamaluddin-abu-bakar.
- ↑ "Here's All You Need To Know About Khairy Jamaluddin". 8 November 2022. https://www.therakyatpost.com/news/malaysia/2022/11/08/heres-all-you-need-to-know-about-khairy-jamaluddin/.
- ↑ "How an international education helped Khairy Jamaluddin become Malaysia's Health Minister". 4 November 2022. https://studyinternational.com/news/khairy-jamaluddin-education/.
- ↑ "The New Health Minister – Who Is Khairy Jamaluddin And Why Is He Trending?". 27 August 2021. https://www.therakyatpost.com/living/2021/08/27/the-new-health-minister-who-is-khairy-jamaluddin-and-why-is-he-trending/.
- ↑ Beech, Hannah (30 October 2006). Not the Retiring Type (page three). TIME.
- ↑ The Malaysian Insider.Khairy signs up as Territorial Army reservist பரணிடப்பட்டது 10 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம் 25 May 2010.
- ↑ "Khairy earns his paratrooper jump wings". The New Straits Times. 18 February 2011 இம் மூலத்தில் இருந்து 19 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110219233128/http://www.nst.com.my/nst/articles/23kala/Article/.
- ↑ Astro Awani Khairy Jamaluddin made Askar Wataniah Brigadier General பரணிடப்பட்டது 2 சூலை 2020 at the வந்தவழி இயந்திரம் 26 October 2016
- ↑ Ahmad Suhael Adnan (15 August 2018). "Khairy resigns as commander of Territorial Army's 508 Regiment". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2018/08/401564/khairy-resigns-commander-territorial-armys-508-regiment.
- ↑ Ahmad Suhael Adnan (15 August 2018). "Lebih baik saya undur diri - KJ" (in ms). Dailymotion (MSN). https://www.msn.com/en-my/news/1mdb/lebih-baik-saya-undur-diri-kj/vi-BBLX2WN.
- ↑ BERNAMA. 20 January 2006. பரணிடப்பட்டது 14 மே 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ TEACHING OF SCIENCE AND MATHS IN ENGLISH: It's high time we ditched this policy பரணிடப்பட்டது 25 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம் New Straits Times 9 September 2008.
- ↑ Free Malaysia Today Khairy vs Ambiga: a heated affair பரணிடப்பட்டது 30 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம் Accessed 21 August 2012.
- ↑ The Star Online Khairy: Weak Umno bad for Barisan 21 August 2006.
- ↑ "Khairy Jamaluddin New Youth And Sports Minister". Bernama. 16 May 2013. http://www.bernama.com/bernama/v7/ge/newsgeneral.php?id=950032.
- ↑ "TN50 a good long-term plan". The Star Online. 30 Jan 2017. https://www.thestar.com.my/opinion/letters/2017/01/30/tn50-a-good-longterm-plan/.
- ↑ KAMLES KUMAR (8 June 2017). "Khairy: My own TN50 aspiration is a future-proof Malaysia". The Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2017/06/08/khairy-my-own-tn50-aspiration-is-a-future-proof-malaysia/1394619.
- ↑ Shannon Teoh, Hazlin Hassan (9 March 2020). "Malaysia's PM Muhyiddin unveils Cabinet line-up, four senior ministers named". The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/malaysias-pm-muhyiddin-unveils-cabinet-line-up-four-senior-ministers-named.
- ↑ Arjun (10 March 2020). "It takes three men to handle Yeo Bee Yin's portfolio". The Sun (Malaysia). https://www.thesundaily.my/local/it-takes-three-men-to-handle-yeo-bee-yin-s-portfolio-numan-afifi-ME2107394.
- ↑ Zahiid, Syed Jaymal (20 November 2022). "After narrow loss to Pakatan in Sungai Buloh, 'exhausted' Khairy says will take time to reflect". Malay Mail இம் மூலத்தில் இருந்து 27 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127133100/https://www.malaymail.com/news/malaysia/2022/11/20/after-narrow-loss-to-pakatan-in-sungai-buloh-exhausted-khairy-says-will-take-time-to-reflect/40835.
- ↑ "It's not the end of the road, vows KJ after GE15 defeat". Free Malaysia Today. 20 November 2022 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120050442/https://www.freemalaysiatoday.com/category/nation/2022/11/20/its-not-the-end-of-the-road-vows-kj-after-ge15-defeat/.
- ↑ Mohamed Basyir (November 20, 2022). "Khairy: Zahid must resign now as Umno's reform cannot be delayed anymore".
- ↑ "Umno confirms sacking of Khairy along with Noh, Hishammuddin and Shahril suspended in Zahid's purge". malaysia.news.yahoo.com (in ஆங்கிலம்). 27 January 2023. Retrieved 2023-01-27.
- ↑ "KJ still has love and affection for UMNO, says Reezal". Free Malaysia Today (in ஆங்கிலம்). Retrieved 2025-10-30.
- ↑ "Khairy set to rejoin UMNO ahead of Sabah State Polls after Zahid's Green Light". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2025-10-30.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). Election Commission of Malaysia. Retrieved 4 February 2017. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.
- ↑ Yang DiPertuan Agong Kurnia 250 Pingat Darjah Kepahlawanan ATM
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Khairy Jamaluddin தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Official website ரெம்பாவ் இணையத்தளம்
- முகநூலில் கைரி சமாலுதீன்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கைரி சமாலுதீன்