கைரதாபாத் பள்ளிவாசல்
கைரதாபாத் பள்ளிவாசல் | |
---|---|
கைரதாபாத் பள்ளிவாசல் 1626. புகைப்படம், 1885இல் லாலா தீன் தயாள் என்பவரால் எடுக்கப்பட்டது | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஐதராபாத்து , தெலங்காணா |
சமயம் | இசுலாம் |
கைரதாபாத் பள்ளிவாசல் (Khairtabad Mosque) என்பது ஐதராபாத்து மாவட்டத்திலுள்ள சிக்கந்தராபாத்திலுள்ள கைரதாபாத்தில் உள்ளது. [1] இன்று கைரதாபாத் பள்ளிவாசல் ஒரு பிரபலமான இடமாக இருக்கிறது. மேலும், இப்பகுதி ஐதராபாத்தின் முக்கிய வணிக மற்றும் தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியது.[2]
பின்னணி
[தொகு]இந்த பள்ளிவாசல் கி.பி 1626இல் ஆறாம் சுல்தான் முகம்மது குதுப் ஷாவின் (கி.பி. 1612-1626) மகள் மா சாஹேபா என்றும் அழைக்கப்படும் கைருனிசா பேகம் என்பவரால் கட்டப்பட்டது. அவர் தனது ஆசிரியரும் சூபி துறவியுமான அகுந்த் முல்லா அபுல் மாலிக் என்பவருக்காக இந்தப் பள்ளிவாசலைக் கட்டினார்.
பள்ளிவாசலை ஒட்டி வெற்று குவிமாடக் கட்டிடம் ஒன்று உள்ளது. எந்தவொரு கல்லறையும் இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அது தன்னுடைய அடக்கத்திற்காக அகுந்த் முல்லாவால் கட்டப்பட்டது. மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டபோது அங்கேயே அவர் இறந்ததால், குவிமாடம் காலியாக உள்ளது.[2]
கைருனிசா பேகம் தனது மருமகன் உசேன் ஷா வாலியிடம் ஒரு அரண்மனை, ஒரு பள்ளிவாசல், ஒரு குளம் ஆகியவற்றைக் கட்டுமாறு கேட்டுக் கொண்டார். இந்தக் குளம் பின்னர் கைரதாபாத்தின் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட உசேன் சாகர் என பிரபலமானது. [1]
கட்டிடக்கலை
[தொகு]கைரதாபாத் பள்ளிவாசலை உசேன் ஷா வாலி என்பவர் வடிவமைத்து கட்டினார். இதற்கு முன்னால் மூன்று வளைவுகள் உள்ளன. இதன் மெல்லிய மினாரில் நிறைய அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன.[3]
ஆந்திரவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை இதை ஒரு பாரம்பரிய தளமாக அறிவித்திருந்தது.[4]
மேலும் காண்க
[தொகு]- ஹயாத் பக்சி பள்ளிவாசல்
- எசுப்பானியப் பள்ளிவாசல்
- ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா
- மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bilgrami, Syed Ali Asgar (1927). Landmarks Of The Deccan. pp. 57-58.
- ↑ 2.0 2.1 "Andhra Pradesh Tourism".
- ↑ Khairatabad Mosque. 1612. http://dome.mit.edu/handle/1721.3/32109.
- ↑ "Archived copy". Archived from the original on 6 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)