உள்ளடக்கத்துக்குச் செல்

கைமூர் மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைமூர் மலைத்தொடர் (Kaimur Range) விந்திய மலைத்தொடரின் கிழக்கு பகுதியாகும். 483 கி.மீ. நீளம் கொண்டது, மத்தியப் பிரதேச மாநிலம்[1] ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கதங்கியில் இருந்து, பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சஸரம் வரை உள்ளது. இது ரேவா மற்றும் மிர்சாபூர் பிரிவுகளின் வழியாக செல்கிறது. இதன் பரப்பளவைச் சுற்றியுள்ள சமவெளிக்கு மேல் ஒரு சில நூறு மீட்டருக்கும் மேலாக உயர்வதில்லை. மேலும் அதிகபட்ச அகலம் சுமார் 80 கி.மீ. ஆகும்   [2]

எல்லை

[தொகு]

கதங்கி வரை உள்ள விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதி பன்டர் மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது. சிராம்பூர் சமவெளி மற்றும் மலைத்தொடர் பகுதிகள் கைமூர் மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது.

கிழக்கு மத்தியப்பிரதேசத்தில் மிகப்பெரிய கைமூர் மலைச்சரிவு உள்ளது. இது இந்திய தீபகற்பத்தின் இரண்டு பெரிய ஆறுகளான தெற்கே சோன் மற்றும் வடக்கில் தமசா ஆகியவைகளைப் பிரித்து வைக்கிறது . இதன் மொத்த நீளத்தில் நர்மதா பள்ளத்தாக்கு வரையான 300 மைல் நீளத்தில், எந்த இடத்திலும் கிளைகளாக இல்லை. எல்லா இடங்களிலும் 500 முதல் 1000 அடி உயரத்திற்கு அதன் அடிவாரத்தில் இருந்து உயர்கிறது.

கைமூர் மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

  • உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கைமூர் வனவிலங்கு சரணாலயம்
  • பீகாரில் கைமூர் வனவிலங்கு சரணாலயம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://books.google.co.in/books?id=-jO0fvT4r9gC&pg=PA53&dq=Kaimur+ranges&hl=en&sa=X&ved=0ahUKEwj-1Pnrwq3hAhVFqo8KHSBTBZMQ6AEIKDAA#v=onepage&q=Kaimur%20ranges&f=false
  2. https://en.wikipedia.org/wiki/Kaimur_Range
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைமூர்_மலைத்தொடர்&oldid=2685984" இலிருந்து மீள்விக்கப்பட்டது