கைப்பெரம்பலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கைப்பெரம்பலூர்
கப்பரம்பூர்
கிராமம்
கைப்பெரம்பலூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
அரசு
 • வகைபொது
 • Bodyதமிழ்நாடு
மக்கள்தொகை
 • மொத்தம்10,024
 • தரவரிசை1024
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
சுட்டெண்621716.[1]
தொலைபேசி04328
வாகனப் பதிவுTN46, TN45
அருகிலுள்ள நகரம்பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, திருச்சிராப்பள்ளி.
படிப்பறிவு72%
காலநிலைcool- hat-cool (கோப்பென்)
இணையதளம்https://www.facebook.com/groups/Kaiperambalur/

கைப்பெரம்பலூர் (ஆங்கிலம்:Kaiperambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவு[தொகு]

கப்பரம்பூர் அல்லது அதிகாரபூர்வமாக கைப்பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டத்திலுள்ள கிழுமத்தூர் (வடக்கு)[2]வருவாய் கிராமத்துக்குட்பட்ட சிற்றூர். இங்கு கிழக்கில் வயலூர் ஏரி, மேற்கில் கைப்பெரம்பலூர் ஏரி, வடக்கில் வற்றகுளம் அமைந்துள்ளது, தெற்கில் சின்னாறு ஓடுகிறது. கைப்பெரம்பலூர் பெரிதும் நகரமயம் ஆக்கப்பட்டுள்ளது. இங்கு மிகக்குறைவான அளவிலேயே மழை பெய்தாலும் ஏரி சீரமைப்பு மூலம் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1995 இல் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூர் மாவட்டமும் புது மாவட்டங்களாக உருவாக்கப்பட்டபோது இவ்வூர் பெரம்பலூர் மாவட்டத்தின் கீழ் வந்தது. அதற்கு முன்புவரை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்திருந்தது.

மக்கள் தொகை[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,139 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கைப்பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

இங்கு பெரிய பிள்ளையார், மாரியம்மன், அய்யனார், திரௌபதிஅம்மன், பெருமாள் மற்றும் சிவன் கோவில்கள் உள்ளன.

பள்ளிகள்[தொகு]

இவ்வூரில் ஒரு தொடக்கப்பள்ளியும், ஒரு நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன.

ஏரி மற்றும் குளங்கள்[தொகு]

  • கிழக்கில் திரத்தகுளமும், வயலூர் ஏரியும்
  • மேற்கில் கைப்பெரம்பலூர் ஏரியும்
  • வடக்கில் வற்றகுளமும், குப்பையன் குளமும்,
  • தெற்கில் சின்னாறு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைப்பெரம்பலூர்&oldid=1638635" இருந்து மீள்விக்கப்பட்டது