கைனூர் சிவன் கோவில்
Appearance
கைனூர் சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கைனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் சிவன், கிழக்கு நோக்கி உள்ளார்.[1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராமரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] [3] இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது. முற்காலத்தில் கைனூர் சிவன் கோயிலில் தினமும் முரஜபம் நடைபெற்று வந்தது. [4] கிழக்கில், அண்மையில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோபுரம் உள்ளது.
இக்கோயிலானது திருச்சூர் - மானமங்கலம் - புதூர் வழித்தடத்தில், கைனூர் கிராமத்தின் நடுவில், கருவண்ணூர் புழாவின் துணை நதியான மணலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "108 Siva Temples".
- ↑ "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". Archived from the original on 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
- ↑ "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".
- ↑ "Kainoor - Siva Temple".